என்ஐஏ அலுவலகத்தில் தனி சிறை.. 12 பேருக்கு மட்டுமே அனுமதி.. உச்ச கட்ட பாதுகாப்பில் அடைக்கப்படும் ராணா
டெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியான ராணா, டெல்லி அழைத்து வரப்பட்டார். ராணாவை தேசிய புலனாயவு முகமை கட்டுப்பாட்டில் எடுத்து பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளது. அதன்பிறகு என்.ஐ.ஏ அலுவலகத்தில் உள்ள சிறையில் விசாரணைக்காக அடைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. விசாரணைக்கு பிறகு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்படலாம் எனவும், அதன் பிறகு மும்பைக்கு மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி தாஜ் ஓட்டல், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 பேர் உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

தஹாவூர் ராணா
உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல் பட்டவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹட்லி, பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணா உள்ளிட்டோர் கூட்டு சதியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் ராணாவை இந்தியா தேடி வந்த நிலையில், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2014-ம் ஆண்டு ராணாவுக்கு 14 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு, அமெரிக்காவிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்தியா வைத்த கோரிக்கையை ஏற்று டிரம்பும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். எனினும், தன்னை நாடு கடத்தக்கூடாது என்று ராணா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
டெல்லியில் கைது
ஆனால், இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இந்திய நேரப்படி நேற்று இரவு ராணாவை அதிகாரிகள் தனி விமானத்தில் ஏற்றினார்கள். இந்த விமானம் இன்று மாலை டெல்லி பாலம் விமானம் நிலையம் வந்தது. ராணா இந்தியா வந்ததும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அவரை கைது செய்தனர்.
முன்னதாக ராணா அழைத்துவரப்பட்டதையடுத்து, பாலம் விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குண்டு துளைக்காத வாகனங்கள், கமோண்டா வீரர்களுடன் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு இருக்கும் ராணா, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அதன்பிறகு தேசிய புலனாய்வு தலைமை அலுவலகத்தில் உள்ள ஸ்பெஷல் சிறையில் ராணா அடைக்கப்பட உள்ளார்.
ஹட்லியுடன் இணைந்து சதித்திட்டம்
பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட இருக்கும் ராணா இருக்கும் பகுதிக்கு செல்ல 12 அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன. என்.ஐ.ஏ டிஜி சதானந்த டேட், ஐஜி ஆஷிஸ் பத்ரா, டிஐஜி ஜெயாராய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மட்டுமே அந்த சிறைக்கு செல்ல முடியும். இதைத்தாண்டி யார் செல்ல வேண்டும் என்றாலும் அனுமதி பெற வேண்டும்.
ராணாவிடம் நடத்தப்பட இருக்கும் விசாரணையில், முக்கிய ஆவணங்களை காட்டி தகவல்களை பெற என்.ஐ ஏ திட்டமிட்டுள்லதாம். ஹட்லியுடன் இணைந்து தீட்டிய சதித்திட்டம் மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ் ஐ யுடன் இருக்கும் தொடர்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இந்த விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications