பள்ளிக் கல்வியின் செயல்திறன் குறியீடு.. முதலிடத்தை பிடித்த சண்டிகர்.. தமிழ்நாட்டிற்கு எந்த இடம்?
டெல்லி: 2023-24ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வி செயல்திறன் தரக் குறியீட்டில் தமிழ்நாடு 16வது இடத்தில் இருப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. தமிழ்நாட்டை விடவும் சண்டிகர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்டவை சிறந்த செயல்திறனுடன் செயல்படுவதாகவும், தெலங்கானா, அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் மிகக்குறைந்த செயல்திறனுடன் செயல்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாட்டை மதிப்பிட செயல்திறன் தரக் குறியீடு மத்திய கல்வி அமைச்சகத்தால் கடந்த 7 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022-23 மற்றும் 2023-2024 ஆகிய கல்வியாண்டுக்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல் திறன் குறியீடு வெளியாகி இருக்கிறது.

மாணவர் உரிமைகள், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள், பள்ளி மற்றும் குழந்தை பாதுகாப்பு, நிர்வாக செயல்பாடு, வகுப்பறை செயல்பாடுகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உள்ள 74 அளவுகோல் அடிப்படையில் இந்த செயல்திறன் குறியீடு மதிப்பிடப்படுகிறது. இதன்பின் 2023-24ஆம் ஆண்டில் 1,000க்கு 703 புள்ளிகள் பெற்று சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.
இதன்பின் பஞ்சாப் 631.2 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தில்லி 623.7 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து குஜராத் 614.4 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், ஒடிசா 595./6 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், 594.2 புள்ளிகளுடன் கேரளா 6வது இடத்திலும், 592.2 புள்ளிகளுடன் டாமண்டையூ 7வது இடத்திலும், 591.4 புள்ளிகளுடன் ஹரியானா 8வது இடத்திலும், 589.7 புள்ளிகளுடன் கோவா 9வது இடத்திலும் உள்ளன.
அதேபோல் 582 புள்ளிகளுடன் மகாராஷ்டிரா 10வது இடத்திலும், 581.5 புள்ளிகளுடன் 11வது இடத்திலும் உள்ளனர். இந்த பிரிவில் புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, லட்சத்தீவுகள், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் சராசரி செயல்திறன் கொண்ட மாநிலங்களாக இடம்பிடித்துள்ளன.
அதேபோல் தெலங்கானா, அசாம், ஜார்க்கண்ட், திரிபுரா, மணிப்பூர், பீகார், நாகலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் உள்ளது. இந்தப் பட்டியலில் 2022-23ஆம் ஆண்டு செயல்திறன் குறியீட்டில் 563.7 புள்ளிகளில் இருந்து சரிவை சந்தித்துள்ளது. 2023-24ஆம் ஆண்டு 559.2 புள்ளிகளை பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாடு செயல்திறன் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications