கைது மட்டும் ஆகவே கூடாது.. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் செந்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் அவசரஅவசரமாக உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

tasmac-scam-case-senthil-balaji-files-anticipatory-bail-petition-in-supreme-court-after-chennai-hig

முந்தைய திமுக ஆட்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. கடந்த 2021 முத்ல 2025ம் ஆண்டு வரை டாஸ்மாக் கடைகளில் விற்பனை தொடர்ந்து அதிகரித்தாலும் கூட வருவாய் என்பது குறைந்தள்ளது.

இதனால் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று புகார்கள் கிளம்பின.

இதையடுத்து நேற்று முன்தினம் செந்தில் பாலாஜி மற்றும் அவர் தொடர்புடைய 41 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை மேறகொண்டனர். செந்தில் பாலாஜியின் கரூர் இல்லம், அவரது கூட்டாளிகளின் வீடு, அலுவலகங்கள், சென்னையில் செந்தில் பாலாஜி தங்கியிருக்கும் ஹோட்டல்கள், திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு சொந்தமானது என்று கூறப்படும் திருவாரூர் மதுபான ஆலை என சென்னை, கரூர், திருவாரூர், கரூர், தஞ்சாவூர், கோவை, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, காங்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை என்று மொத்தம் 41 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு செந்தில் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விசாகன், டாஸ்மாக் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர் செல்வம், செந்தில் பாலஜாியின் உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜியின் நண்பர்கள் ரதேஷ் ராஜ் சண்முகவேல், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரான கரூரை சேர்ந்த கார்த்திக் உள்பட 7 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம், மோசடி உள்பட 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டது. அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை வந்தது. இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. இது செந்தில் பாலாஜிக்கு பின்னடைவாக அமைந்தது. அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் பரவ தொடங்கியது.

இந்நிலையில் தான் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க செந்தில் பாலாஜி அவசரஅவசரமாக டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, கபில் சிபல் ஆகியோர் இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் அவசர வழக்காக இன்று விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், மனுவில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை சரிசெய்து தாக்கல் செய்யுங்கள். நாளை விசாரிக்கலாம் என்று கூறினார். இதையடுத்து செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரிய மேல்முறையீடு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+