தமிழர் அவுட்.. மலையாளி இன்! சந்திரசேகரன் விலகலுக்குப் பின் டாட்டா சன்ஸின் அடுத்த தலைவர் இவரா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாட்டா குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் மீண்டும் ஒரு பெரிய மாற்றம் உருவாகியுள்ளது. டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் என். சந்திரசேகரன், 2027 பிப்ரவரியில் தனது நடப்பு பதவிக்காலம் நிறைவடைந்தவுடன் தலைவர் பொறுப்பிலிருந்து விலகப்போவதாகவும், மீண்டும் அப்பொறுப்பை ஏற்க விரும்பவில்லை என்றும் அறிவித்துள்ளார்.

சந்திரசேகரனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டாட்டா குழுமத்தின் தலைமையகமான பம்பாய் ஹவுஸில் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த ஆலோசனைகளும் விவாதங்களும் சூடுபிடித்துள்ளன. இந்த வரிசையில், டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (MD & CEO) 61 வயதான டி.வி. நரேந்திரனின் பெயர் மிக முக்கியமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

Tata

டாட்டா சன்ஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை

பொதுவாக இந்தியாவில் உள்ள பல குடும்பத் தொழில் குழுமங்களில், நிறுவன குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அடுத்தடுத்த தலைவர்களாக நேரடியாக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், டாட்டா சன்ஸ் இதில் முற்றிலும் மாறுபட்ட நடைமுறையைப் பின்பற்றுகிறது.

டாட்டா சன்ஸின் விதிமுறைகளின்படி, அதன் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஐந்து பேர் கொண்ட சிறப்புத் தேர்வுக் குழு அமைக்கப்படும். இதில் சர் தொராப்ஜி டாட்டா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாட்டா டிரஸ்ட் ஆகியவற்றால் இணைந்து பரிந்துரைக்கப்படும் மூன்று உறுப்பினர்கள், டாட்டா சன்ஸ் நிர்வாகக் குழுவின் ஒரு உறுப்பினர் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினர் இடம்பெறுவர்.

டாட்டா சன்ஸின் பங்குகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்குகளை டாட்டா டிரஸ்ட்டுகளே வைத்துள்ளதால், தலைமை மாற்றத்தில் டிரஸ்ட்டுகளின் முடிவு மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. தற்போதைய சூழலில், டாட்டா டிரஸ்ட் மற்றும் டாட்டா சன்ஸ் இடையே உள்ள நிர்வாக உறவுகள் மற்றும் சில சட்டரீதியான சிக்கல்களுக்கு இடையே இந்த தேர்வு நடைபெறுகிறது.

யார் இந்த டி.வி. நரேந்திரன்?

டாட்டா அமைப்பிற்குள் மிகவும் அனுபவம் வாய்ந்த, களத்தில் நின்று செயலாற்றும் மூத்த அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் டி.வி. நரேந்திரன். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT Trichy) பொறியியல் பட்டமும், கொல்கத்தா ஐ.ஐ.எம்-மில் (IIM Calcutta) மேலாண்மைப் பட்டமும் பெற்ற இவர், 1988 ஆம் ஆண்டு டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் மூலம் டாட்டா குழுமத்தில் இணைந்தார். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

கிட்டத்தட்ட நான்கு தசாப்த கால நீண்ட சேவை அனுபவத்தைக் கொண்ட இவர், விற்பனை, சந்தைப்படுத்தல், சர்வதேச வர்த்தகம் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாகத் தாய்லாந்தில் தங்கியிருந்து, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் டாட்டா ஸ்டீலின் சந்தையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். பின்னர் 2013-ல் டாட்டா ஸ்டீலின் மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

முந்தைய தலைவர் சந்திரசேகரன் தகவல் தொழில்நுட்பத் துறையான TCS மூலம் வளர்ந்தவர் என்றால், நரேந்திரன் உற்பத்தி மற்றும் தொழிற்துறை சார்ந்த ஆழமான பின்னணியைக் கொண்டவர்.

ஏன் நரேந்திரனின் பெயர் முன்னணியில் உள்ளது?

நரேந்திரன் டாட்டா ஸ்டீலின் பொறுப்பை ஏற்​கும்போது, உலகளாவிய எஃகு சந்தையில் கடும் விலையேற்ற இறக்கங்களும், சர்வதேச நிறுவனங்களைக் கைப்பற்றியதால் ஏற்பட்ட அதிகக் கடன்களும் பெரிய சவாலாக இருந்தன. ஆனால், அவரது தலைமையின்கீழ் நிறுவனம் கடன்களைக் குறைத்து, நிதி ஓட்டத்தைச் சீரமைத்து, இந்தியாவில் தன் சந்தை நிலையை வலுப்படுத்தியது.

பிரிட்டன் மற்றும் நெதர்லாந்தில் உள்ள சிக்கலான தொழில் மறுசீரமைப்புப் பணிகளையும், சர்வதேச விநியோகச் சங்கிலிச் சவால்களையும் கையாண்ட அனுபவம் அவருக்கு உண்டு. டாட்டா சன்ஸ் தலைவராக வருபவர் ஒவ்வொரு நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளையும் நேரடியாக இயக்க வேண்டியதில்லை; மாறாக, மூலதன ஒதுக்கீடு, நீண்டகால உத்திகள் மற்றும் நிறுவன நிர்வாக வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். நரேந்திரனின் இந்த நீண்டகால தொழிற்துறை அனுபவம் அவருக்குப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், 2016-ல் ஏற்பட்ட சைரஸ் மிஸ்திரி சர்ச்சைக்குப் பிறகு, டாட்டா குழுமத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நன்கு அறிந்த நபர்களுக்கே டாட்டா முன்னுரிமை அளித்து வருகிறது. சந்திரசேகரனைத் தொடர்ந்து, 40 ஆண்டுக்கால டாட்டா பாரம்பரியத்தைக் கொண்ட நரேந்திரன் அந்தத் தகுதிக்குப் கச்சிதமாகப் பொருந்துகிறார்.

சவால்கள்

இருப்பினும், நரேந்திரன் மட்டுமே இந்த ரேஸில் ஒரே நபர் அல்ல. நோயல் டாட்டா, சௌரப் அகர்வால் போன்ற பிற மூத்த தலைவர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. மேலும், டாட்டா குழுமத்தின் உள்கட்டமைப்பு விதிமுறைகள் மற்றும் வயது வரம்புகள் இறுதி முடிவில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+