டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'டீக்கடைக்காரர்' அவதார் சிங் டெல்லியில் மேயரானார்... பிரதமர் மோடி வாழ்த்து

Google Oneindia Tamil News

டெல்லி : டீக்கடைக்காரர் டெல்லியில் மேயர் ஆனதை, தொடர்ந்து, அவரை நேரில் அழைத்து, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான பதிவையும் ட்விட்டரில் மோடி பதிவிட்டுள்ளார்.

டீக்கடையில், அரசியல் பேசுவதை கேட்டு இருப்போம், பார்த்து இருப்போம், ஏன் , நாமே கூட டீக்கடையில் அரசியல் பேசியிருப்போம். அதே நேரம், அந்த டீக்கடைக்காரர்களே, அரசியலில் உயர்ந்த கதையையும் பார்த்து தான் வருகிறோம்.

பிரதமர் மோடியில் தொடங்கி, தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் என பலர், அரசியலில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். அந்தவகையில், டெல்லியைச் சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவர், மேயராக பதவியேற்றுள்ளார். அவரை பற்றி தற்போது, பார்க்கலாம்.

கேரளாவை அதிர வைத்த 'மனைவி மாற்றம்' சம்பவம்.. 4 'கணவர்களுக்கு' நீதிமன்ற காவல் கேரளாவை அதிர வைத்த 'மனைவி மாற்றம்' சம்பவம்.. 4 'கணவர்களுக்கு' நீதிமன்ற காவல்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி சிறுவயதில் தன் தந்தையின் டீக்கடையில் பணியாற்றிய போது குஜராத் மாநிலம் வத்நகர் ரயில் நிலையத்தில் தான் டீ விற்றதாக 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூறினார். இதனை கேட்ட மக்கள் பிரதமர் மோடி டீ விற்று பிரதமர் ஆனவரா என உள்ளம் நெகிழ்ந்து போனார்கள்.

நமோ டீக்கடை

நமோ டீக்கடை

பிரதமர் மோடி டீக்கடை வைத்து பெரிய தலைவராக உயர்ந்தவர் என்பதை விளம்பரப்படுத்தும் வகையில், அப்போது நமோ டீக்கடைகள் நாடு முழுவதும் பாஜகவினரால் திறக்கப்பட்டது. பல டீக்கடைகளுக்கு நமோ டீக்கடை என பெயர் மாற்றப்பட்டது. டீக்கடைக்கார்களின் பாராட்டுகளை மோடி வாரி குவித்தார்.

ஆம் ஆத்மி ஆட்சி

ஆம் ஆத்மி ஆட்சி

இந்தநிலையில், டெல்லியில் டீக்கடை நடத்தி வந்த அவதார் சிங் என்ற பா.ஜ.க தொண்டர் வடக்கு டில்லியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.

நட்சத்திர ஹோட்டல் ஊழியர்

நட்சத்திர ஹோட்டல் ஊழியர்

இங்குள்ள வடக்கு டெல்லி பகுதியை சேர்ந்தவர் அவதார் சிங். பா.ஜ.க தொண்டரான இவர் பல ஆண்டுகளுக்கு முன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தார். பின்னர் சொந்தமாக டீக்கடை துவங்கினார். வடக்கு டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வானார்.

மோடி வாழ்த்து

இந்நிலையில் வடக்கு டெல்லி மாநகராட்சியின் மேயராக அவதார் சிங் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் சமூகவலை தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெல்லியில் மேயர் பதவி வகிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முதல் சீக்கியர் அவதார் சிங் என அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். டீக்கடை வைத்தால், லாபம் கிடைக்குமா, கிடைக்காதா என சொல்ல முடியாது. ஆனால் அரசியலுக்கு சரிப்பட்டு, வரும் என சிலர் முணுமுணுப்பதும் கேட்க தான் செய்கிறது.

English summary
Prime Minister Modi Congratulates For Tea shop owner Became Mayor in Delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X