டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 வருடம் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.. முதல்முறை செய்தியாளர்களை சந்தித்த மோடி.. பரபரப்பு பேட்டி!

ஐந்து வருடம் ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஐந்து வருடம் ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு முடிகிறது. இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

5 வருடத்தில் முதல்முறை மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார். பிரதமர் மோடி சிரித்துக் கொண்டே செய்தியாளர்களிடம் பேசினார்.

மோடி பேட்டி

மோடி பேட்டி

மோடி தனது பேட்டியில், தேர்தல் பரப்புரை மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இனி கொஞ்சம் இளைப்பாறுவேன். இது ஜனநாயகத்தை கொண்டாட வேண்டிய தருணம். தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி.

இப்போதுதான் மோடி அலை அதிகம் வீசுகிறது.. எங்களுக்கே வெற்றி.. மோடியுடன் சேர்ந்து அமித் ஷா பேட்டி! இப்போதுதான் மோடி அலை அதிகம் வீசுகிறது.. எங்களுக்கே வெற்றி.. மோடியுடன் சேர்ந்து அமித் ஷா பேட்டி!

வெற்றிபெறுவோம்

வெற்றிபெறுவோம்

தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நாட்டை மீண்டும் ஆளுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இந்த முறை உள்ளது. நாங்கள் கடந்துவந்த பாதை எளிதானதல்ல. மக்களுக்கு நன்றி சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

நன்றி சொன்னோம்

நன்றி சொன்னோம்

நாட்டின் பல இடங்களுக்கு சென்ற போது மக்களிடம் நன்றி தெரிவிக்க முடிந்தது. மக்களை பார்க்க பார்க்க எனக்கு உற்சாகம் கூடியது. பாஜகவிற்கு வாக்களிக்க மக்கள் மனதளவில் தயாராக இருக்கிறார்கள். 2014 தேர்தலை விட இந்த தேர்தலில் பரப்புரை பெரிய அளவில் இருந்தது.

சீர் திருத்தம்

சீர் திருத்தம்

நாட்டின் நிர்வாக முறைகளில் நாங்கள் நிறைய சீர் திருத்தங்களை கொண்டு வந்து இருக்கிறோம். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம். ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம், என்று மோடி குறிப்பிட்டார்.

English summary
Thanks for the chance to rule this country says PM Modi on his first ever press meet in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X