Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தி ஆக்சிடென்டல் பிஎம் மன்மோகன் சிங்னா.. ஆக்சிடென்டல் முதல்வர் யார் தெரியுமா? வைரல் டிரெண்ட்!

தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்தை வைத்து இந்தியாவில் உள்ள பிரபலங்கள் எல்லோரும் இணையத்தில் கலாய்க்கப்பட்டு வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்தை வைத்து இந்தியாவில் உள்ள பிரபலங்கள் எல்லோரும் இணையத்தில் வகைவகையாக ரகம் ரகமாக கலாய்க்கப்பட்டு வருகிறார்கள்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வரலாற்றை மையமாக வைத்து வந்த புத்தகம்தான் தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். சஞ்சயா பாரு எழுதிய இந்த புத்தகத்தை தற்போது விஜய் ரத்னாகர் குட்டே என்பவர் படமாக எடுக்கிறார்.

இதற்கான டீசர் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது. இந்த படம் குறித்த செய்திகள் தற்போது பெரிய வைரலாகி உள்ளது.

அட போங்க பாஸ்

அட போங்க பாஸ்

வருட இறுதியில் கன்டென்ட் இல்லாமல் கஷ்டப்படும் எல்லோரும் தற்போது இந்த தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்தை வைத்து மற்ற பிரபலங்களை கலாய்த்து வருகிறார்கள். தி ஆக்சிடென்டல் கிரிக்கெட் வீரர் யார், தி ஆக்சிடென்டல் முதல்வர் யார் என்று கூறி வித விதமாக கலாய்த்து வருகிறார்கள்.

புதுச்சேரிக்கோ வணக்கம்

பாஜக உறுப்பினர்களுடன் நடந்த விவாதத்தில் புதுச்சேரி பாஜக உறுப்பினர் ஒருவரை பார்த்து, ''புதுச்சேரிக்கோ வணக்கோம்'' என்று பிரதமர் மோடி கூறினார். இது பெரிய வைரல் ஆனது. ஆனால் மோடியிடம் கேள்வி கேட்ட புதுச்சேரி பாஜக நிர்வாகி, பாஜகவிற்கு எதிராக கேள்வி கேட்க அது பெரிய சர்ச்சையானது. அந்த ஒரு பேட்டிக்குபின் மோடியிடம் கேள்வி கேட்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கேள்வியை தி ஆக்சிடென்டல் கேள்வி என்று கூறி இருக்கிறார்கள்.

ஆக்சிடென்ட் கிரிக்கெட் கோச்

மோசமான விமர்சனங்களை சந்தித்து வரும், இந்திய கிரிக்கெட் அணியின் கோச் ரவி சாஸ்திரியை இவர் தி ஆக்சிடென்ட் கோச் என்று கூறியுள்ளார். ஆமாம் பாஸ் இவர் வந்த அப்பறம்தான் டீம்ல நிறைய ஆக்சிடென்ட் நடந்து இருக்கு!

தி ஆக்சிடென்டல் ஆல்ரவுண்டர்

ஆல்ரவுண்டர் என்ற போர்வையில் இந்திய அணியில் விளையாடாமல், டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா என்று ரவுண்டு கட்டிக் கொண்டு இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியவை இவர் தி ஆக்சிடென்டல் ஆல்ரவுண்டர் என்று கூறியுள்ளார்.. பாவம் பாண்டியா!

தி ஆக்சிடென்டல் பினான்ஸ் மினிஸ்டர்

பண மதிப்பு கீழ போச்சு, பெட்ரோல் விலை ஏறிப்போச்சு, பொருளாதாரம் எங்கயோ போயிடுச்சு.. அப்ப இவர்தான் தி ஆக்சிடென்டல் பினான்ஸ் மினிஸ்டர் மக்களே!

யோகியும் விபத்தும்

உத்தர பிரதேச மக்களை பொறுத்தவரை முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் தி ஆக்சிடென்டல் முதல்வராம்.. ஹலோ பாஸ் அப்ப எங்க முதல்வர் பழனிச்சாமி யாரு?

தி ஆக்சிடென்டல் அக்குவாமேன்

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த டிசி படமான அக்குவாமேன் படத்தையும், பதஞ்சலி மேன் பாபா ராம்தேவையும் வைத்து இவர் கலாய்த்து இருக்கிறார்... இவர்தான் இந்தியாவின் தி ஆக்சிடென்டல் அக்குவாமேன்.. அப்ப சுறா விஜய் பாஸ்?

வெறும் ஆக்சிடென்ட்

இப்போது இருக்கும் பிரதமரை வைத்து படம் எடுத்தால் அதற்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று சொல்ல்லுங்கள்.. வேற என்ன வெறும் விபத்து (ஆக்சிடென்ட்) என்றுதான் வைக்க வேண்டும் என்று கிண்டல் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+