நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.. லோக்சபாவில் டிஆர் பாலு ஆவேசம்
தமிழக அரசின் தீர்மானம், மசோதா மீது ஆளுநரோ, மத்திய அரசோ எந்த முடிவும் எடுப்பதில்லை என திமுக எம்.பி டிஆர் பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லி: தமிழகத்தில் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்த முடியாத அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடு உள்ளது என டி.ஆர். பாலு கூறியுள்ளார். தமிழக அரசின் தீர்மானம், மசோதா மீது ஆளுநரோ, மத்திய அரசோ எந்த முடிவும் எடுப்பதில்லை எனவும், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது இப்போது வரை தெரியவில்லை எனவும் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்றும் டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை மாலை நீட் விலக்கு மசோதா தொடர்பாக லோக்சபாவில் விவாதிக்கக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது. ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் வழங்கினார். நீட் விலக்கு தொடர்பாக ஏற்கனவே கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று லோக்சபாவில் பேசிய , திமுக எம்பி டி.ஆர்.பாலு, ஆளுநருக்கு தமது அரசியல் சாசனம் அதிக அதிகாரங்களை வழங்கி உள்ளது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்க வேண்டும் . மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் முக்கிய பணி என்று கூறினார்.
தமிழக அரசு அனுப்பிய 7 மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார். தமிழக ஆளுநர் சட்டத்தை மதிக்காமல் காட்டாட்சி நடத்துகிறாரா? ஆளுநர் சட்டப்படி செயல்பட வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார். தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் அல்லது நீங்க வேண்டும் என்றும் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்றார். மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரத்தை இவர் எடுத்துக்கொண்டு திருப்பி அனுப்பியுள்ளார் இது மோசமான நடவடிக்கை என்றார். இது அரசியல் சாசனப்படி சட்ட விரோதம் என்றும் கூறினார். ஆளுநர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என்றும் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்த முடியாத அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடு உள்ளது என டி.ஆர். பாலு கூறியுள்ளார். தமிழக அரசின் தீர்மானம், மசோதா மீது ஆளுநரோ, மத்திய அரசோ எந்த முடிவும் எடுப்பதில்லை எனவும், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது இப்போது வரை தெரியவில்லை எனவும் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications