டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடும்பமே சட்டத்துறை.. ரொம்ப ஸ்டிரிக்ட்.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் எஸ்ஏ போப்டே.. பின்னணி!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி எஸ்ஏ போப்டே நீண்ட சட்ட அனுபவமும் அறிவும் கொண்டவர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    CJI Ranjan Gogoi recommends Justice S.A. Bobde

    டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி எஸ்ஏ போப்டே நீண்ட சட்ட அனுபவமும் அறிவும் கொண்டவர். பல முக்கிய வழக்குகளில் இவர் நீதிபதியாக தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்ஏ போப்டே பொறுப்பேற்க உள்ளார். நவம்பர் 18ம் தேதி இவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதி எஸ்ஏ போப்டேவை பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீதிபதி எஸ்ஏ போப்டே நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் நீதிபதி எஸ்ஏ போப்டே.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்!உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் நீதிபதி எஸ்ஏ போப்டே.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

    யார் இவர்

    யார் இவர்

    நீதிபதி எஸ்ஏ போப்டேவின் முழுப்பெயர் சரத் அர்விந்த் போப்டே. 63 வயது நிரம்பிய இவர் 1978ல் இருந்து நீதித்துறையில் இருக்கிறார். போப்டே இதற்கு முன் மத்திய பிரதேச மாநில ஹைகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். அதேபோல் மஹாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலை மற்றும் நாக்பூர் தேசிய சட்ட பல்கலையில் இவர் வேந்தராக இருக்கிறார்.

    சட்ட குடும்பம்

    சட்ட குடும்பம்

    இவரின் குடும்பமே சட்டம் பயின்ற குடும்பம் ஆகும். இவரின் தாத்தா வழக்கறிஞராக இருந்தவர். இவரின் அப்பா அரவிந்த் போப்டே மஹாராஷ்டிராவில் வழக்கறிஞராக இருந்தார். அதேபோல் இவரின் அண்ணன் வினோத் போப்டே உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தவர்.

    பயின்றார்

    பயின்றார்

    இவரும் அவர்களை போல ஆக ஆசைப்பட்டு 1978ல் நாக்பூர் பல்கலையில் சட்டம் பயின்றார். 1978ல் இருந்து இவர் வழக்கறிஞராக இருந்து வருகிறார். 1998லிருந்து இவர் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2000ம் ஆண்டு இவர் மும்பை ஹைகோர்ட்டில் நீதிபதியானார். அதேபோல் 2012ல் இவர் மத்திய பிரதேச தலைமை நீதிபதியானார்.

    ஹைகோர்ட் நீதிபதி

    ஹைகோர்ட் நீதிபதி

    அங்கு தலைமை நீதிபதியாக இருந்த போது இவர் மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ல் இவர் உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்த்தப்பட்டார். இவர் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.இந்திய குடிமகன்களில் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய ஆதார் தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கிய அமர்வின் போப்டே இருந்தார்.

    எப்போது ஓய்வு

    எப்போது ஓய்வு

    அதேபோல் போப்டே அமர்வுதான் டெல்லியில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதித்தது. 23 ஏப்ரல் 2021ல் இவர் ஓய்வு பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The new Chief Justice of India: Who is this Justice S A Bobde- All you need to know about him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X