வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! சென்னையில் விலை இவ்வளவா? அதிர்ச்சியில் வர்த்தகர்கள்
டெல்லி : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டர் விலை 102.50 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில் 2355.50 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதால் வர்த்தகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டு 660 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது

கேஸ் விலை உயர்வு
இந்நிலையில் மே மாதம் துவங்கியுள்ள நிலையில் மாதத்தின் முதல் நாளில் மற்றொரு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஒரு சிலிண்டருக்கு 104 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. ஆனால் ஆறுதல் அளிக்கும் வகையில் வீட்டு பயன்பாடு எல்பிஜி சிலிண்டர்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை. தலைநகர் டெல்லியில் 19 கிலோ வணிக எரிவாயுவின் விலை தற்போது சிலிண்டருக்கு ரூ.102.50 அதிகரித்து ரூ.2,355 ஆக உள்ளது.

விலை நிலவரம்
கடந்த மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.268.50 உயர்த்தப்பட்டது நிலையில், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயுவின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தாதது பெரிய நிம்மதி அளிக்கும் விசயம் ஆகும். தேசிய தலைநகர் டெல்லியில் 14.2 கிலோ மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.949.5 ஆக உள்ளது. இது தவிர, கொல்கத்தாவில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.976 ஆகவும், மும்பையில் ரூ.949.50 ஆகவும் உள்ளது.

விமான எரிபொருள் விலை
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மானியம் இல்லாத சிலிண்டரின் விலை தற்போது ரூ.965.50 ஆகவும், லக்னோவில் ரூ.987.50 ஆகவும், பாட்னாவில் ரூ.1039.5 ஆகவும் உள்ளது. அதேபோல், விமான எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இல்லை, ஆனால் விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது. டெல்லியில் ஏர் டர்பைன் எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு ரூ.116851.46 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொல்கத்தாவில் கிலோ லிட்டர் ரூ.121430.48 ஆகவும், மும்பையில் 115617.24 ஆகவும், சென்னையில் கிலோ லிட்டர் ரூ.120728.03 ஆகவும் உயர்ந்துள்ளது.

வணிகர்கள் அதிர்ச்சி
ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை 1110 ரூபாயை கடந்து உள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வரவு சற்று குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ள நிலையில் , தற்போது வர்த்தக சிலிண்டருக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளதால் உணவகம், பேக்கரி உள்ளிட்ட தொழில்கள் நடத்தும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே டீ, காபி உள்ளிட்டவைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் வணிகர்கள் உள்ளனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications