காதல் திருமணங்களில் தான் அதிக விவாகரத்து ஏற்படுகின்றன.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை!
டெல்லி: பெரும்பாலான விவாகரத்துகள் காதல் திருமணங்களில்தான் ஏற்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் திருமணம் என்பது சாதி, மதங்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் காதல் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் திருணங்கள் என்பது ஒரு கலாச்சார நிகழ்வு. மற்ற நாடுகளில் பொருளாதார அடிப்படையில் திருமணங்கள் நிர்ணயிக்கப்படும் போது இந்தியாவில் மட்டும் சாதி, மதம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்த வகை திருமணங்கள் சாதிய கட்டமைப்பை வளர்ப்பதாக இருந்தாலும், பாதுகாப்பானதாக இருப்பதால் பெண்கள் இதில் அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஏனெனில் காதல் திருமணங்களில் பெரும்பாலும் பிரச்னையாக வெடிக்கும் விஷயம் பொருளாதாரம்தான்.

அதிலும் வேறு மதம் சாதியை சேர்ந்தவரை கரம்பிடிக்கும்போது இந்த திருமணத்திற்கு ஒட்டுமொத்த குடும்பமும் கடும் எதிர்ப்பை தெரிவிக்கும். இது தவிர சில இடங்களில் ஆணவ கொலைகளும் அரங்கேறுவது உண்டு. எனவே உயிருக்கு பயந்து மறைவான இடத்தில் கொஞ்ச காலம் வாழ வேண்டும். மற்றொருபுறம் ஊர் பேர் தெரியாத இடத்தில் இப்படி வாழும்போது அங்கே வேலைவாய்ப்பு, போதுமான அளவில் சம்பளம் போன்றவற்றிலும் சிக்கல்கள் மேலெழுகிறது. இது வாழ்வதற்கான போராட்டத்தை மேலும் அதிகரிக்கிறது. எனவே காதல் திருமணங்களில் அடிக்கடி பிரச்னைகள் மேலெழுகின்றன.
இது இப்படி எனில், மறுபுறம் வீட்டில் பார்க்கும் பெண்ணை/மாப்பிள்ளையை திருமணம் செய்வது என்பது ஒரு சேஃப் ஜோன் போல இருக்கிறது. இந்த குடும்பத்திற்கு தேவையான பொருளாதார உதவிகளை சொந்த பந்தங்களே செய்து கொடுத்துவிடும். மறுபுறம் காலங்காலமாக வசித்து வரும் அதே இடத்தில் இருக்கலாம். புலம் பெயர்ந்து யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வேலைக்காகவும், அக்கம் பக்கம் உதவிக்காகவும் கஷ்டப்படத் தேவையில்லை. ஆனால் குடும்பம், சாதி, மதம், பழமைவாதம் போன்ற கட்டமைப்புகளிலேயே தொடர்ந்து உழன்றுக்கொண்டிருக்கும் நிலை இதில் உருவாகும்.
சிம்பிளாக சொல்வதெனில் காதலை விட குடும்பத்தை அதிகம் நேசிப்பவர்கள், காதலால் ஏமாற்றமடைந்தவர்கள், வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வீட்டில் பார்த்து ஏற்பாடு செய்பவர்களை திருமணம் செய்துக்கொள்கின்றனர். மறுபுறம் பழமைவாத கட்டமைப்பில் மூழ்க விரும்பாதவர்கள், புதுமையை தேடுபவர்கள், தங்கள் காதலன்/காதலி நம்பிக்கைக்குரியவராக அமைந்தவர்கள் ஆகியோர் காதல் திருமணத்தை நோக்கி நகர்கின்றனர். சமீப காலங்களாக காதல் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதற்கு சினிமா ஒரு முக்கியமான காரணமாகும்.

ஆனால் காதல் குறித்த புரிதல் அதிகரித்திருக்கிறதா? சமூகம் குறித்த புரிதல் அதிகரித்திருக்கிறதா? என்று கேட்டால் அது மிகப்பெரிய கேள்விக்குறிதான். காதலிப்பவர்கள் தாங்கள் இருவர் மட்டும்தான் உலகம் என்று நினைக்கின்றனர். ஆனால் இவ்வளவு பெரிய உலகத்தில் அவர்கள் வெறும் சிறு புள்ளிதான். திருமணத்திற்கு பின்னர் என்ன செய்ய போகிறோம்? நாம் எந்த சமூக கட்டமைப்பிலிருந்து வந்திருக்கிறோம்? இந்த சமூகத்திற்கு நாம் என்ன செய்யபோகிறோம்? அப்படி இல்லையென்றாலும் கூட தங்களை போல அடுத்தடுத்து காதல் திருமணம் செய்யும் இளைஞர்களுக்கு நாம் எதை எடுத்துக்காட்டாக விட்டுவிட்டு போக போகிறோம் என்பது குறித்து காதலர்கள் சற்று சிந்திக்க வேண்டும் என காதல் திருமணத்தை ஆதரிப்பவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இப்படி இருக்கையில்தான் இன்று விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது பெரும்பாலான விவாகரத்துகள் காதல் திருமணங்களில்தான் ஏற்படுகிறது என்று கூறியுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications