பெட்ரோல் விலை உயர்வுக்கு தாலிபான்கள் தான் காரணம்.. பாஜக எம் எல் ஏ பேச்சு
டெல்லி : பெட்ரோல் விலை உயர்வுக்கு தாலிபான்கள் தான் காரணம் என்று பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ அரவிந்த் பெல்லாத் கூறியுள்ளார். பெட்ரோல் பற்றாக்குறை ஆப்கானிஸ்தான் பிரச்சனையால் ஏற்படுள்ளதாக அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லட் கூறுகையில், எரிபொருள் விலை உயர்வின் பின்னணியில் தலிபான்கள் இருக்கின்றனர்.
தலிபான்களின் பிரச்சனை தொடங்கிய காலத்திலிருந்தே, உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை உருவானது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுத்தது என்று பேசியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

எரிபொருள் ஏற்றுமதி
ஏனெனில் ஆகஸ்ட் 15 ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான வர்த்தகம் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், எரிபொருளைப் பொருத்தவரை இரு நாடுகளுக்கும் இடையே பெரிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உறவு இருந்ததில்லை.

எங்கு இறக்குமதி
இந்தியாவிற்கு எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் இடம்பெறவில்லை. ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நைஜீரியா, அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. எனவே ஆப்கானிஸ்தான் நிலைமை இந்தியாவில் எரிபொருள் விலையை பாதிக்க வாய்ப்பில்லை.

மத்திய அரசு வரிகள்
இந்தியாவில் பெட்ரோல் டீசல் கேஸ் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வுக்கு என்ன காரணம்? வரிகள் தான் முக்கிய காரணம். மாநில மற்றும் மத்திய அரசுகள் விதிக்கும் கணிசமான வரி காரணமாக விலை அதிகமாக இருக்கிறது என்பதை இங்கே கவனிக்க வேண்டியது அவசியம். மத்திய அரசு எரிபொருள் கலால் வரி, மற்றும் மதிப்பு-சேர்க்கப்பட்ட வரி (VAT) மற்றும் மாநில வாரிகள் ஆகியவை மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களால் விதிக்கப்படும் பிற கட்டணங்கள் உள்ளிட்டவைகளால் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக உள்ளது.
Recommended Video

விலையை குறைக்க மறுப்பு
கடந்த சில மாதங்களாக, எரிபொருள் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்குமாறு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசோ நலத்திட்டங்களுக்காக செலவழிக்க பணத்தை மிச்சப்படுத்துவதால் அதற்காக விதிக்கப்படும் வரிகளை குறைக்க முடியாது என்ற நிலைப்ப்பாட்டில் உறுதியாக உள்ளது. இதுவே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆகும்
-
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக்












Click it and Unblock the Notifications