அவங்க பயங்கரவாதத்தின் ஒரு அங்கம்! காஷ்மீர் பைல்ஸை எதிர்ப்பவர்களை விளாசும் இயக்குனர் அக்னிஹோத்ரி!
டெல்லி: காஷ்மீரில் இனப்படுகொலை நடக்கவில்லை என எதிர்ப்பவர்கள் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது அப்பாவியாகவோ இருப்பார்கள் என அப்படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் நாடு முழுவதும் வெளியாகி அரசியல் ரீதியாகவும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபவம் கேர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இந்த படம்தான் தற்போது தேசிய அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பிரதமர் மோடி பாராட்டு
80 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜம்மு காஷ்மீர் வன்முறை சமயத்தில் அங்கிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதாக இந்த படத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை அண்மையில் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும் படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் சலுகை
இந்த படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, திரிபுரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா, குஜராத், உத்தராகண்டில் வரி விலக்கு அளிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் இந்த படத்தை பார்க்க செல்லும் போலீசாருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டது. அதே போல் மற்ற சில மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்ப்பதற்காக விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு
இந்த படம் குறித்து கேரள மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில், "காஷ்மீர் தாக்குதல்களின்போது பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அப்போது ஆளுநராக இருந்த பாஜக - ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஜக்மோகன் அவர்களை காஷ்மீரை விட்டு வெளியேற சொன்னார்." எனக் குற்றம்சாட்டியது. அதே போல் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

அரசியல் காரணத்தால் வசூல் வேட்டை
முதல் 4 நாட்கள் மிகக் குறைவான அளவிலேயே வசூல் செய்த காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பாஜக ஆளும் மாநிலங்களின் வரிவிலக்கு, விடுமுறை அறிவிப்பு காரணமாகவும், அதில் இடம்பெற்ற காட்சிகளுக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களாலும் அடுத்தடுத்த நாட்களில் அதிகளவிலான திரையரங்குகளில் காட்சிபடுத்தப்பட்டு வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இயக்குநர் கருத்து
இந்த படம் மதவெறியை தூண்டுவதாகவும், தவறான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாகவும் பலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதுகுறித்து இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். "காஷ்மீரில் நடந்ததை இனப்படுகொலை என்று சொல்லும் முதல் நபர் நான் இல்லை. இதுகுறித்து விளக்கி இருக்கும் புத்தகங்களை நூலகங்களில் இருந்து அகற்றிவிட்டு வெளியேற்றம் என்ற வதந்தியை பரப்பினர். உண்மையில் இது இனப்படுகொலைதான். இனப்படுகொலையை மறுப்பவர் யாராக இருந்தாலும் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது அப்பாவியாகவோ இருப்பார். " என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications