இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு
டெல்லி: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுவதாக தகவல்கள் வருகின்றன.

பயமுறுத்தும் ஓமிக்ரான்
ஓமிக்ரானை தடுக்கும் வகையில் இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் அதனையும் தாண்டி ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது. முதன் முதலில் கர்நாடகாவில்தான் ஓமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களுக்கும் பரவியது. இந்தியாவில் தற்போது மகாராஷ்டிரா, டெல்லி, தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இதுவரை மொத்தம் 270--க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

உச்சத்தை எட்டும்
ஓமிக்ரான் வைரஸ் பரவும் வேகம், நோயாளிகளிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸால் இந்தியாவில் கொரோனா 3-வது அலை பிப்ரவரி மாதம் உச்சத்தை எட்டும் என்று ஐஐடி-கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது பிப்ரவரி 3- ம் தேதிக்குள் இந்தியாவில் 3-வது அலை உச்சத்தை எட்டும் அவர்கள் கணித்துள்ளனர்.

ஐஐடி-கான்பூர் ஆராய்ச்சியாளர்கள்
டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கி பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தை எட்டக்கூடும் என்றும் பல நாடுகளில் ஓமிக்ரான் பரவும் வேகம், தற்போதய அதிகரிப்பு ஆகிய தரவுகளை மையமாக வைத்து இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகம் எடுக்கும் என்று ஐஐடி-கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் இந்த கணிப்பை கூறியுள்ளனர்.
Recommended Video

லேசானதாக இருக்கும்
ஐஐடி ஹைதராபாத் பேராசிரியர் குழுவின் தலைவர் வித்யாசாகர், இந்தியாவில் மூன்றாவது ஓமிக்ரான் அலை இருக்கும், ஆனால் அது இரண்டாவது அலையின் தாக்கத்தை விட லேசானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்பதையே இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கணிப்பு காட்டுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications