'இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை.. கண்டிப்பாக ஏற்படும், ஆனால்..' ஐசிஎம்ஆர் புதிய ஆய்வில் முக்கிய தகவல்
டெல்லி: இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டாலும்கூட அது 2ஆம் அலை அளவுக்கு மோசமாக இருக்க வாய்ப்பு குறைவு என ஐசிஎம்ஆர் தனது ஆய்வில் கூறியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.
இதையடுத்து கொரோனா 3ஆம் அலை குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இது குறித்து ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா 3ஆம் அலை
அந்த ஆய்வில் கொரோனா வைரசின் அடுத்த அலை ஏற்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் அது கொரோனா 2ஆம் அலையைப் போல மிகப் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேவையான திட்டங்களை வகுத்து முன்னெச்சரிக்கை பணிகளைச் சரியாக மேற்கொண்டால், எதிர்காலத்தில் எத்தனை அலை ஏற்பட்டாலும் அதனை எளிதாக எதிர்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர்
இருந்தாலும்கூட தற்போதைய சூழ்நிலையில் எதையும் உறுதியாகக் கூற முடியாது. இப்போது வேக்சின் பணிகளை மிக விரைவாக மேற்கொள்வது மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வழி என்றும் ஐசிஎம்ஆர் தனது ஆய்வில் கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் ஜூன் மாதம் மட்டும் சராசரியாக ஒரு நாளைக்கு 18 லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை நாட்டில் 40 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சோதனை
கொரோனா பரவலைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதில் பரிசோதனைகள் முக்கியம். அதிகமாக வேக்சின் சோதனை செய்யப்பட்டால் தான் நாட்டில் கொரோனா பரவல் நிலை எப்படியுள்ளது என்தை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும். அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். தொடக்கம் முதலே பல்வேறு வல்லுநர்களும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றே வலியுறுத்தி வந்தனர். அந்த நிலையை இந்தியா தற்போது அடைந்துள்ளது.

உருமாறிய கொரோனா
இந்தியாவில் தற்போது புதிதாக டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு கவலைக்குரிய கொரோனாவைக பட்டியலிட்டுள்ளது. இதன் காரணமாக முறையான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் நாட்டில் 6 முதல் 8 வாரங்களில் கொரோனா 3ஆம் அலை ஏற்படும் ஆபத்துள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications