இதுதான் வித்தியாசம்.. இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் பிரதமருக்கு இர்பான் பதான் பதிலடி..சொன்னது என்ன?
டெல்லி: இங்கிலாந்திடம் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், இந்தியாவை கலாய்த்து ட்விட் செய்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.
உலககோப்பை டி20 போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்று நடக்கும் பைனலில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
முன்னதாக நடந்த அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தானும், இந்தியாவை இங்கிலாந்தும் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறின.

அரையிறுதியில் இந்தியா தோல்வி
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா சரியாக விளையாடவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் வழக்கம்போல் சொதப்பிய நிலையில் பந்துவீச்சும் துளியும் எடுபடவில்லை. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

கலாய்த்த பாகிஸ்தான் பிரதமர்
இதனை பாகிஸ்தான் ஷேபாஸ் ஷெரீப் கலாய்த்து இருந்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இந்த ஞாயிற்றுக்கிழமை 152/0 Vs 170/0 இடையே மோதல் நடக்கிறது'' என குறிப்பிட்டு இருந்தார். அதாவது கடந்த 2021 உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் 151 ரன் இலக்கை பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி எட்டியது. அதேபோல் தற்போதைய டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் 168 ரன்னை இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி விரட்டி வெற்றி பெற்றது. இதனை குறிப்பிட்டு தான் பாகிஸ்தான் -இங்கிலாந்து அணிகள் டி20 உலககோப்பை பைனலில் விளையாடுவதை குறிக்கும் வகையில் இந்தியாவை கலாய்த்து ஷேபாஸ் ஷெரீப் குறிப்பிட்டு இருந்தார்.

இர்பான் பதான் பதிலடி
ஷேபாஸ் ஷெரீப்பின் இந்த ட்விட்டர் பதிவை இந்தியர்கள் கடுமையாக கண்டித்தனர். இந்நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக இர்பான் பதான் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

வித்தியாசம் இதுதான்
‛‛இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் எங்களது நிலையில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடைவோம். ஆனால் நீங்கள் மற்றவர்களின் கஷ்டத்தில் மகிழ்ச்சியை தேடுகிறீர்கள். மற்றவர்களின் தோல்வியில் நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள். அதனால் தான் பாகிஸ்தானை சிறந்ததாக கட்டமைப்பில் நீங்கள் கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்'' என சாடியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications