டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னது சிபிஐ தலைமையகத்தில் சிபிஐ ரெய்டா? இந்த வீடியோ பாருங்க எல்லாம் புரியும்!

நேற்று சிபிஐ தலைமையகத்தில் சிபிஐ அமைப்பே ரெய்டு நடத்தி இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வரலாற்றில் முதல் முறையாக சிபிஐ அலுவலகத்தில் சோதனை

    டெல்லி: நேற்று சிபிஐ தலைமையகத்தில் சிபிஐ அமைப்பே ரெய்டு நடத்தி இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி இருப்பதால் நேற்று சிபிஐ தலைமையகத்தில் சிபிஐ அமைப்பு ரெய்டு நடத்தியது. இந்திய வரலாற்றில் முதல் முறை இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது.

    This video can explain how CBI raids in its own CBI headquarters in Delhi

    லஞ்ச புகாரில் சிக்கி உள்ள சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதேபோல் நேற்று முக்கியமான சிபிஐ அதிகாரியான தேவேந்தர் குமார் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் சிபிஐ எப்படி சிபிஐ அலுவலகத்தில் சோதனை நடத்தியது என்று பலரும் குழம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று இவர் ஒரு காமெடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தனக்கு தானே ஒருவர் முடிவெட்டிக் கொள்ள ஆசைப்பட்டு வெட்டினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த ரெய்டு என்று கிண்டல் செய்துள்ளார்.

    சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் ஆலோசனையின் பெயரில் சில முக்கிய அதிகாரிகள்தான் இந்த ரெய்டை நடத்தியது. சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா அலுவலகம், அவருக்கு நெருக்கமானவர்களின் அறைகளில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rakesh Asthana Bribe: CBI raids in its own CBI headquarters in Delhi and also arrested its own officer Devender Kumar. This video can explain how CBI raids in its own CBI headquarters in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X