ராஜேந்திர பாலாஜிக்கு இறுகும் பிடி.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வைத்த செக்.. கேவியட் மனு தாக்கல்!
டெல்லி: ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது போலீசில் புகார்கள் வந்தன.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்து அவர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் ராஜேந்திர பாலாஜி
ஆனால் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யலாம் என்று போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு பயந்து ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி விட்டார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழகத்தின் மதுரை, கோவை, கொடைக்கானல் போன்ற பகுதிகளிலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் தனிப்படை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

லுக்-அவுட் நோட்ட்டீஸ்
ஆனாலும் ராஜேந்திர பாலாஜி போலீசாரின் கையில் சிக்காமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். அவர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு "லுக்-அவுட்" நோட்டீசும் போலீசார் அனுப்பி உள்ளனர். தற்போது ரூ.11 லட்சம் பண மோசடி வழக்கில் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்திலும் செக்
ஜாமீன் தர முடியாது என்று உயர்நீதிமன்றம் கைவிரித்து விட்டதால் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இங்கு ஜாமீன் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்து வரும் நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் செக் வைத்துள்ளது தமிழக அரசு. அதாவது ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
Recommended Video

எங்கள் விளக்கத்தை கேட்காமல்...
''ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் தொடர்பாக எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த ஓரு உத்தரவும் பிறப்பிக்க கூடாது'' என்று கேவியட் மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் தொடர்பாக விசாரிக்கும்போது தமிழக அரசின் கருத்தை கேட்கும் பட்சத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் வாய்ப்பு குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications