201 கோடியை எட்டிய தடுப்பூசி எண்ணிக்கை! 21 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! அதிகரித்த பலி எண்ணிக்கை!
டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், இன்று சுமார் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது.

கொரோனா பாதிப்பு
மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வரும் நோய்தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதில் தாமதம் காரணமாகவே நோய் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

திடீர் சரிவு
இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இன்று சுமார் மீண்டும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை திடீர் சரிவை சந்தித்த நிலையில், இன்று 21,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 47 ஆயிரத்து 065 ஆக அதிகரித்துள்ளது.

குறைந்த பலி எண்ணிக்கை
அதேபோல் கொரோனா காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தி ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரம் 930 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா மரணங்கள் 30க்குள் என்ற அளவிலேயே இருந்த நிலையில், தற்போது பல நாட்கள் இடைவேளைக்குப் பிறகு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது . கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 21 ஆயிரத்து 219 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 ல்ட்சத்து 71 ஆயிரத்து 653 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி அளவு
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1 லட்சத்து 49 ஆயிரத்து 482 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.34% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 201 கோடியே 31 லட்சத்து 53 ஆயிரத்து 839 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 101 கோடியே 98 லட்சத்து 38 ஆயிரத்து 573 டோஸ்களும், இரண்டாம் தவணையாக 92 கோடியே 83 லட்சத்து 79 ஆயிரத்து 258 டோஸ்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 கோடியே 49 லட்சத்து 36 ஆயிரத்து 008 டோஸ்களும் போடப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications