இந்தியாவில் ஓமிக்ரான்! பெரிய நெகட்டிவ் நியூஸ் சொன்ன அரசு விஞ்ஞானி.. கூடவே ஒரு பாசிட்டிவ் செய்தியும்!
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை குறித்து மூத்த மருத்துவ நிபுணர் ஒரு பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் பரவி வருகிறது. இதில் நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 4,033 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் நேற்று ஒரே நாளில் 410 பேருக்கு புதிதாக ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிராவில் 1,216 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் தமிழகத்தில் இதுவரை 185 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் ஏற்படும் பாதிப்பை பொருத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள்.

டெல்டாவிட ஓமிக்ரான் வேகம்
ஓமிக்ரான் டெல்டாவை விட வேகமாக பரவும் என சொல்லப்பட்டது. கொரோனா டேட்டாக்களை வைத்து பார்க்கும் போது ஓமிக்ரான் வேகமாக பரவினாலும் சீரியஸான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்ற ஆறுதல் தரும் செய்தி நமக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. அந்த வகையில் என்டிடிவி செய்தி நிறுவனத்திற்கு ஓமிக்ரான் குறித்து மூத்த மருத்துவ நிபுணர் பகீர் தகவலை அளித்துள்ளார்.

மூத்த விஞ்ஞானி
இதுகுறித்து ஐசிஎம்ஆரின் தேசிய தொற்று நோய் துறையின் விஞ்ஞான ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் ஜெய்பிரகாஷ் முலியில் கூறுகையில் 2ஆவது அலை வரும் போதிலிருந்தே கொரோனாவுடன் வாழ நாம் பழகிவிட்டோம். டெல்டா வேரியண்ட் தீவிரமான போது அரசால் சொல்லப்பட்ட பாதிப்பு எண்ணிக்கையை 30 ஆல் பெருக்கிக் கொண்டால் அதுதான் உண்மையான பாதிப்பு நிலவரம் ஆகும்.

60 முதல் 90 மடங்கு அதிகம்
இந்த உண்மையான எண்ணிக்கையை யாரும் வெளியிட்டதில்லை. அது போல் தற்போது ஓமிக்ரான் குறித்து அரசு வெளியிட்டுள்ள எண்ணிக்கையிலும் உண்மையில்லை. 60 முதல் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது ஒரு எண்ணிக்கை கொண்ட பாதிப்பாகவே அறிவிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் ஓமிக்ரான் பாதிப்போர் குறித்த எண்ணிக்கையானது 60 முதல் 90 மடங்கு அதிகமாகவே இருக்கும்.
Recommended Video

வீடுகளில் முடங்க முடியாது
கடுமையான லாக்டவுன் போடப்பட்டிருந்தாலும் வீடுகளில் அதிக நேரம் இருக்க முடியாது. டெல்டா வேரியண்ட்டை காட்டிலும் ஓமிக்ரான் பாதிப்பு மிகவும் லேசானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளார். மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் கோரிக்கையாகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications