எந்த விசாரணையும் இல்லை.. 6 ஆண்டு சிறை! உமர் காலித்துக்கு இந்த முறையாவது ஜாமின் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 2020 ஆம் ஆண்டு, டெல்லி கலவர சதி வழக்கில் உபா (UAPA) சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள JNU முன்னாள் மாணவர் உமர் காலித், தனக்கு ஜாமின் வழங்க கோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு கால ஜாமின் தடை முடிவடைய உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இந்த ஜாமின் மனுவை சமர்ப்பித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Umar Khalid

கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி அன்று, உச்சநீதிமன்றம் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமின் மறுத்தபோது.. ஓராண்டு காலத்திற்கு அவர்கள் மீண்டும் ஜாமின் கூறக்கூடாது என தடை விதித்திருந்தது. தற்போது அந்த தடைக்காலம் முடிவடைய உள்ளதால்.. காலித் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். நீதிமன்றம் இந்த உத்தரவை பிறபித்த போது, பாதுகாப்பு சாட்சிகளை அரசு தரப்பு விசாரித்து முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அல்லது ஓராண்டு காலம் முடிவு வேண்டும். இதில் எது முந்தியதோ.. அப்போது அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

தற்போது வரை சாட்சிகள் விசாரணை முடியாததாலும், வரும் ஜனவரி 5ஆம் தேதி தேதிக்குள் விசாரணை முடிய வாய்ப்பில்லை என்பதாலும்.. நீண்ட கால சிறை வாசத்தை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் உமர் காலித். முன்னதாக, செப்டம்பர் 30 அன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரதீபா எம் சிங் மற்றும் தினேஷ் பட் அமர்வு, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை தங்களால் மாற்றி அமைக்க முடியாது என்ற என கூறி உமர் காலத்தின் ஜாமின் மனுவை நிராகரித்திருந்தது.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு 'கே.ஏ. நஜீப்' வழக்கின் தீர்ப்புடன் முரண்பட்டு இருப்பதாக விவாதங்கள் எழுந்திருக்கின்றன. அதாவது உபா சட்டத்தின் கீழ், நீண்ட காலம் விசாரணை இல்லாமல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால், அது விரைவான விசாரணைக்கான அடிப்படை உரிமையை பாதிக்கும் என்பதால்.. ஜாமின் வழங்கலாம் என்று முன்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை உமர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த தீர்ப்பை விளக்குவதில் உச்ச நீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகளுக்கு இடையே முரண்பாடுகள் எழுந்தால்.. நீதிபதி அரவிந்த் குமார் அமர்வு, இந்த விவகாரத்தை அண்மையில் ஒரு பெரிய அரசியலமைப்பு அமர்வுக்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையின் போது.. இந்த வழக்கின் பிற குற்றவாளிகளான தஸ்லீம் அகமது மற்றும் காலித் சைஃபி ஆகியோருக்கு ஆறுமாத இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு சட்ட கேள்வி நிலுவையில் உள்ளதால் மட்டும் விசாரணை விரைவில் முடிவடையாத ஒரு வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவரை, தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க முடியாது என்று அப்போது நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது. இந்த சாதகமான தீர்ப்பை முன்வைத்து.. தனக்கும் ஜாமீன் வேண்டும் என்று உமர் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் மீண்டும் ஜாமின் கோரி அவர் விண்ணப்பித்துள்ள வழக்கு விசாரணை மற்றும் அதன் மீதான உத்தரவு குறித்து எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+