"ஆன்லைன் பரிவர்த்தனை வரம்பு இருமடங்காக அதிகரிப்பு".. நிர்மலா சீதாராமன்
ஆன்லைன் பரிவர்த்தனை வரம்பு 9 லட்சமாக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருக்கிறார்.
டெல்லி: ஆன்லைன் பரிவர்த்தனை வரம்பு 9 லட்சமாக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருக்கிறார். தற்போது வரை அதிகபட்சமாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக 4.5 லட்சம் வரை பணபரிமாற்றங்கள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று அவர் பட்ஜெட்டில் வெளியிட்டார். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு, அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு அதிகரிப்பு என பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஆன்லைன் பரிவர்த்தனை வரம்பு 9 லட்சமாக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருக்கிறார். தற்போது வரை அதிகபட்சமாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக 4.5 லட்சம் வரை பணபரிமாற்றங்கள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஜாயிண்ட் கணக்கு வைத்திருபவர்கள் ரூ. 15 லட்சம் வரை பரிவர்த்தனை செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வங்கி வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் வந்துள்ள அறிவிப்பு மூலம் நாட்டில் ஆன்லைன் மூலமாக நடைபெறும் மொத்த பணபரிமாற்றங்கள் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications