தெய்வ பக்தியுடன் கூடிய வாழ்க்கை பாதையை காட்டிய திருவள்ளுவர்:மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழில் வாழ்த்து
டெல்லி: தெய்வ பக்தியுடன் கூடிய வாழ்க்கைப் பாதையை காட்டியவர் திருவள்ளுவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டிருந்த செய்தி: திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்: திருவள்ளுவர் ஜெயந்தியான இன்று அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவரது செழுமையான எண்ணங்கள் மற்றும் உன்னத இலட்சியங்கள் அனைவருக்கும் சிறந்த உத்வேகம் தரும்.

மத்திய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா: திருவள்ளுவர் போதித்த தெய்வீக ஞானமும் வாழ்க்கைப் பாடமும் பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் தெய்வ பக்தியுடன் கூடிய வாழ்க்கைப் பாதையைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார். இளைஞர்களிடையே, திருவள்ளுவரின் நூல்களை படிக்கும் ஆர்வத்தை நாடு தழுவிய அளவில் இந்த நாள் தூண்டட்டும் என்றும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்:ஆளுநர் ரவி அவர்கள், பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம், நீதி சாஸ்திரங்களை ஒருங்கே பெற்ற தனிச்சிறப்பு மிக்க திருக்குறளை வழங்கியவருமான திருவள்ளுவருக்கு அவரது தினத்தில் நெஞ்சார்ந்த மலர் மரியாதையை செலுத்தினார் திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது. அதன் ஆழமான போதனைகள், இன்று #G20 தலைவராக எழுச்சி பெறும் பாரதத்துக்கு மிகவும் பொருத்தமானவை.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்கள் 10 பேர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications