UPI பேமென்ட்.. கட்டணம் உண்டா? புதியதாக கிளம்பும் பயம்.. மத்திய அரசு சொன்ன சூப்பர் மேட்டர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அப்படி எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "UPI மூலம் பணம் அனுப்புவதற்கும், அன்றாடத் தேவைகளுக்காகப் பணம் செலுத்துவதற்கும் பொதுமக்களிடம் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

UPI

குறிப்பாக ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு பணம் அனுப்புவது இலவசமாகவே இருக்கும். சாதாரண குடிமக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக மேற்கொள்ளும் UPI பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. ஆனால், எதிர்க்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பண பரிவரத்தனை செய்யும் வணிகர்களுக்கு மட்டும் மிக குறைந்த அளவில் 'மெர்ச்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட்' (MDR) எனப்படும் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இது கூட அனைத்து வணிகர்களுக்கும் பொறுந்தாது. குறிப்பிட்ட சில பெரிய வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில், சிறு கடைகள்.. அதாவது பெட்டிக்கடை, டீக்கடை, சிறிய துணிக்கடைகள், பூக்கடை, பழக்கடை, பேக்கரி போன்ற சிறிய அளவில் பணப்பரிவர்த்தனை நடைபெறும் கடைகளில் வணிகர்கள் UPI பரிவரத்தனையை இலவசமாக பயன்படுத்தலாம். பெரிய கடைகளுக்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்.

அதுவும் கூட நீண்ட காலத்திற்கு UPI செயல்படுவதற்கும், தொழில்நுட்ப மேம்பாடு, சைபர் பாதுகாப்பு மற்றும் மோசடிகளை தடுக்கவும்தான் இந்த கட்டணம் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கிடையில் வெளிநாட்டின் அழுத்தம் காரணமாகவே UPI பயன்பாட்டுக்கு கட்டணம் விதிக்கப்படுவதாக வெளியான தகவல்கள் தவறானவை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. UPI என்பது.. இந்தியாவின் சொந்த கண்டுபிடிப்பு என்றும், இது பாதுகாப்பானதாகவும், அனைவருக்கும் எளிதில் கிடைப்பதையும் அரசு உறுதி செய்யும் என்று கூறியிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026' நிறைவேற்றப்பட்ட பிறகு, NPCI தலைமையிலான குழு இது குறித்த இறுதி முடிவை எடுக்கும். இருப்பினும், சாதாரண மக்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் UPI எப்போதும் இலவசமாகவே இருக்கும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+