டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரும் மே 1 முதல் தடுப்பூசிக்கு முன்பதிவு கட்டாயம்.. விதிவிலக்கு யாருக்கு? மத்திய அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 15 முதல் 45 வயதுடையவர்கள் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிர தன்மை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது.

நம்பிக்கை இருந்துச்சு... நாலா திசையிலும் உள்ளடி வேலை பார்த்தா எப்படி சார்? பொங்கும் பாஜக வேட்பாளர் நம்பிக்கை இருந்துச்சு... நாலா திசையிலும் உள்ளடி வேலை பார்த்தா எப்படி சார்? பொங்கும் பாஜக வேட்பாளர்

இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தடுப்பூசி பணிகள்

தடுப்பூசி பணிகள்

நாடு முழுவதும் தற்போது 45 வயதைக் கடந்தவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இப்போதும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் கோவின் தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அதேநேரம் நேரடியாகத் தடுப்பூசி செலுத்தும் இடங்களுக்கே சென்றும் முன்பதிவு செய்துகொள்ளும் ஆப்சனும் இப்போது வழங்கப்பட்டுள்ளது.

முன்பதிவு கட்டாயம்

முன்பதிவு கட்டாயம்

ஆனால், மே 1ஆம் தேதிக்குப் பிறகு நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி பணிகள் தொடங்கப்படுவதால், மையங்களில் அதிக கூட்டம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 18 முதல் 45 வயதுடையவர்கள் கோவின் தளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 45 வயதைக் கடந்தவர்கள் நேரடியாக மையங்களுக்குச் சென்று முன்பதிவு செய்யும் ஆப்சனும் வழங்கப்பட்டுள்ளது.

விலை கண்காணிக்கப்படும்

விலை கண்காணிக்கப்படும்

இப்போது அரசு மற்றும் தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. அரசு மையங்களில் இலவசமாகவும் தனியார் மையங்களில் 200 ரூபாய்க்கும் தடுப்பூசி போடப்படுகிறது. வரும் மே 1ஆம் தேதி முதல் மருத்துவமனைகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை நேரடியாக வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலை குறித்துத் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள்

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி தற்போது பயன்படுத்தப்படுகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மருந்து நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி செய்யும் தடுப்பூசியில் பாதியை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் மீதி பாதியை மாநில அரசுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்பனை செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் மருந்தங்களில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

English summary
Centre announces Vaccine registration must for those between 18 and 45.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X