வரலாற்றில் இதுவே முதல்முறை.. வீழும் இந்திய நாணயம்! கண்முன் வந்துபோகும் இலங்கை - 1 டாலர் = 80 ரூபாய்
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்து ரூ.80 ஐ எட்டியுள்ளது.
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.க்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாகவே விலைவாசி உயர்வு, எரிபொருள் விலையேற்றம் போன்றவை ஏற்பட்டு உள்ளன.
இதனால் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை, வேலையின்மை போன்றவை ஏற்பட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து சரியும் ரூபாய்
இந்திய ரூபாயின் மதிப்பும் அமெரிக்க டாலருக்கு நிகராக கடந்த 6 ஆண்டுகளாகவே தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு இடைபட்ட காலத்தில் உலகம் முழுவதும் அச்சுறுத்திய கொரோனா வைரல் தொற்றால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. ஏற்றுமதி இறக்குமதி முடங்கியதால் வளர்ந்து வரும் நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன.

ரஷியா - உக்ரைன் போர்
அதிலிருந்து மீண்டு வருவதற்குள் ரஷியா - உக்ரைன் நாடுகளிடையே வெடித்த போர் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்தன. விலையேற்றம் காரணமாக பணவீக்கமும் பெருகி இருக்கிறது. இந்தியாவில் பணவீக்கம் மோசமான நிலையை அடைந்து இருக்கிறது.

டாலர் மதிப்பு உயர்வு
இந்திய பங்குச்சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக பல நாடுகளின் நாணய மதிப்பு சரிவடைந்து வருவதால், முதலீடுகள் அனைத்தையும் டாலருக்கு மாற்ற நாடுகள் முடிவு செய்ததால் டாலரின் மதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதும் டாலர் மதிப்பு உயர்வதற்கு காரணமாக கூறப்படுகிறது.

அந்நிய செலாவணி
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவதற்கு மற்றொரு காரணம் அந்நிய செலாவணி கையிருப்பு. இந்த ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் அந்நிய செலாவணி கையிருப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கீழ் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2.563 கோடி டாலர்களாக உயர்ந்து இருக்கிறது.

வர்த்தக பற்றாக்குறை
இதுபோன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு படிப்படியாக சரிந்து தற்போது வரலாற்றில் முதல் முறையாக ரூ.80 ஐ அடைந்து இருக்கிறது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசமே வர்த்தக பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாத இந்தியாவின் ஏற்றுமதி 16.8 சதவீதம் அதிகரித்து 3,790 கோடியாக உள்ளது.
Recommended Video

இலங்கை நிலை
இதனால் இந்திய ரூபாயின் நிலை இன்னும் மோசமடையலாம் என்று கூறப்படுகிறது. இலங்கையிலும் இதேபோல் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வர்த்தக பற்றாக்குறை அதிகரித்ததால், அமெரிக்க டாலருக்கு நிகரான அந்நாட்டின் மதிப்பு கடுமையாக சரிந்து விலைவாசி உயர்ந்து பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications