பாதுகாப்புத்துறையில் புதிய உச்சம்.. சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்த மோடி, நாடு முழுவதும் இன்று வந்தே மாதரம் எதிரொலிக்கிறது என்றும்.. அனைவர் மனதிலும் மூவர்ணம் நிறைந்திருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Vande Mataram

"கனவுக்கள் மற்றும் இலக்கின் மீது வைத்திருக்கும் உறுதி அத்துடன் திறன் இணைந்து முன்னேறும்போதுதான் ஒரு நாடு அதன் இலக்கை அடைகிறது. சிறிய கனவுகளை விட்டுவிடுங்கள். பெரிய கனவுகளை காணுங்கள். பெரிய கனவுகள்தான் மக்களின் சிந்தனையையும், தொலைநோக்கு பார்வையையும் விரிவாக்குகிறது.

நாம் கொண்டிருக்கும் உறுதிதான்.. ஒரு நாடு எவ்வளவு சிக்கலில் இருந்தாலும், தடைகளை எதிர்கொண்டு சரியான பாதையில் செல்ல உதவுகிறது. எனவே வலுவான மன உறுதியை கொண்டிருக்க வேண்டும்."

கடந்த 12 ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. குறிப்பாக பாதுகாப்புத்துறை உற்பத்தி 4 மடங்கு, கதர் மற்றும் கிராமத் தொழில் உற்பத்தி 5 மடங்கு, மின்னணு சாதன உற்பத்தி 7 மடங்கு அதிகரித்திருக்கிறது.

செல்போன் உற்பத்தி 33% டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100% அதிகரிகத்துள்ளன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, வளர்ந்த நாடாக மாறும்போது.. உலகம் இந்தியாவை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டி வரும். கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியில் புதிய வேகத்தை கண்டுள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கு 140 கோடி குடிமக்களின் உறுதியும் திறன்களுமே உந்துசக்தியாக உள்ளன.

வந்தே மாதரம் பாடலிலன் 150வது ஆண்டு விழாவை நாடு கொண்டாடி வரு் நிலையில், இந்த நிகழ்வு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

தலித்துகள், விளிம்புநிலை சமூகத்தினர், பழங்குடியினர், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பெண்கள், ஆண்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பையும் நாம் அங்கீகரிக்கிறோம்.

இந்தியா ஒரு காலத்தில் இறங்கக்கூடாத பகுதிகளாக இருந்த இடங்கள்.. இப்போது முன்னேற்றத்திற்கான பகுதிகளாக மாறியிருக்கிறது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியது அவசர தேவையாக இருக்கிறது.

நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக கூடுதல் அணுமின் நிலையங்களை அமைக்க வேண்டும். ஃபாஸ்ட் பிரீடர் அணு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றதன் மூலம் இந்தியா இந்த ஆண்டு ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது அணு எரிபொருள் விவகாரத்தில் தன்னிறைவு அடைவதை நோக்கிய ஒரு முக்கியப்படி.

வளங்களின் பற்றாக்குறையால் மட்டுமல்ல.. பெரும்பாலும் சிந்தனையில் உள்ள வரம்புகளாலேயே நாடுகள் தேக்கமடைகின்றன. சிந்தனை வரம்புகளுக்குள் முடங்கும்போது.. மக்கள் தங்கள் சொந்த திறன்களை உணராமல் போய்விடுகின்றனர். நாமது நாட்டின் கடல்சார் பகுதிகளில் 98% இடங்களில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேடல் நடவடிக்கைகளுக்கு முன்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அரசு இந்த அணுகுமுறையை மாற்றி.. கடல்சார் பகுதிகளில் தேடல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது."

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+