டெல்லியில் ராவணனை எரித்து ராம லீலா- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு!
டெல்லியில் ராவணனை எரித்து ராம லீலா- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மாஜி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு!
டெல்லி: டெல்லியில் தசரா கொண்டாட்டத்தின் ஒருபகுதியான ராமலீலா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராவணன் உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வட இந்திய ராம லீலா: நீங்கள் ராவணனை எரித்தால் ராமனை எரிப்போம்.. 68 ஆண்டுகளுக்கு முன் முழங்கிய கலைஞர்!
வட இந்திய மாநிலங்களில் தசரா பண்டிகையை முன்னிட்டு ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உருவ பொம்மைகள் எரிக்கப்படும். இதற்கு ராமலீலா என பெயரிட்டு அழைக்கின்றனர்.
வட இந்திய ராம லீலாக்கள், ராவணனை மன்னராக போற்றப்படுகிற தென்னிந்தியர்களை இழிவுபடுத்தக் கூடியது என்பது திராவிடர் இயக்கத்தினரின் கருத்து. இதனால் ராம லீலாவுக்கு நீண்டகாலமாக எதிர்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு ராம லீலாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை மைதானத்தில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதனின் பிரம்மாண்ட பொம்மைகள் பல அடி உயரத்திற்கு நிறுவப்பட்டன. இக்கொண்டாட்டத்தின் போது ராவணன் உள்ளிட்டோர் உருவபொம்மைகள் மீது தீ அம்புகள் ஏவப்பட்டு வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். தெலுங்கு நடிகர் பிரபாஸ் பங்கேற்றனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ராவணன் உருவம் எரிப்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.