ராஜஸ்தான் ஃபைல்ஸ்! இந்தியாவில் இந்துக்கள் வாழவே முடியாது! வெடித்த அக்னிஹோத்ரி! குறுக்கே வந்த கங்கனா!
டெல்லி : ராஜஸ்தான் மாநிலம் புதைபொருள் சர்மாவிற்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவில் உண்மையான இந்துக்களால் வாழமுடியாத சூழல் உருவாகி வருகிறது என காஷ்மீர் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஞானவாபி மசூதி குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜகவைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை கூறினார்.
இது இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற ஒரு கருத்தைப் பகிர்ந்த டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜிண்டால், கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதேபோல் நூறு சர்மாவும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நுபுர் சர்மா விவகாரம்
நுபுர் சர்மாவின் இந்த செயலுக்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவின் தூதர்களை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தன. மேலும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்தது. கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் அமைதியாய் அடங்கி இருந்த நிலையில், ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் மீண்டும் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கொடூர கொலை
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபூர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்தான் இந்த பதற்றத்திற்கு காரணம் உதய்ப்பூர் நகரின் மால்தாஸ் பகுதியில் கண்ணையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வருகிறார். நேற்று அவரது கடைக்குள் திடீரென புகுந்த இரண்டு பேர் கண்ணயலாலை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். மேலும் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். மேலும் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கொலை மிரட்டல் பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு
போலீசார் நடத்திய விசாரணையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்த பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கண்ணையா லால் கருத்து வெளியிட்டதாகவும் இதன் காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உதய்பூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு நிலையில் தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

விவேக் அக்னிஹோத்ரி கண்டனம்
இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இந்தியாவில் உண்மையான இந்துக்களால் வாழவே முடியாது என கூறியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் "இந்துஸ்தானில் உண்மையான இந்துக்களால் வாழவே முடியாது என்ற சூழல் உருவாகி வருகிறது. அப்படி வாழ வேண்டுமென்றால் அவர் நகர்ப்புற நக்கலாக இருக்க வேண்டும். அல்லது இருப்பதே தெரியாமல் இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அவர் இறந்திருக்க வேண்டும். தற்போது ராஜஸ்தானில் திகழ்ந்த கொலைக்காக இந்தியாவிடம் கத்தார் நாடு மன்னிப்பு கேட்கவேண்டும்" என கூறியுள்ளார்.

கங்கனா கண்டனம்
மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்," ஒரு மனிதனை கொடூரமாக கொலை செய்துவிட்டு ஜிகாதிகள் அந்த வீடியோவையும் வெளியிடுகின்றனர். கடவுளின் பெயரால்... என கோஷமிட்டப்படி அவர்கள் அந்த மனிதரை கொலை செய்கின்றனர். இந்த வீடியோக்களை பார்க்க எனக்கு தைரியம் இல்லை. நான் மூர்ச்சையாகி விட்டிருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications