நாம் அனைவரும் இந்துக்கள்தான்.. தியாகத்தையே ஆர்.எஸ்.எஸ் கற்றுக்கொடுக்கிறது: மோகன் பகவத் ஓபன் டாக்!
டெல்லி: அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதான நோக்கம் என்றும் நாம் அனைவரும் இந்துக்கள்தான் என்றும் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக மோகன் பகவத் சென்றுள்ளார்.
தனது சுற்றுப்பயனத்தின் முதல் நாளான இன்று ஷில்லாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது மோகன் பகவத் கூறியதாவது:-

நாட்டுக்காக தியாகம் செய்வதற்கே
நமது சமூகத்தை ஒழுங்குபடுத்துவதே சங் அமைப்பின் நோக்கம் ஆகும். அதன் மூலமே இந்தியா முழு வளர்ச்சி அடையும். சுயநலத்தை தியாகம் செய்து விட்டு நாட்டுக்காக தியாகம் செய்வதற்கே ஆர்.எஸ்.எஸ் கற்றுக்கொடுக்கிறது. இந்து மற்றும் இந்தியா என்பது ஒரே மாதிரியான புவியியல் கலாசார அடையாளம் ஆகும். எனவே நாம் அனைவரும் இந்துக்கள்தான்.

சக்திவாய்ந்தவராக மாறுவார்கள்
ஜப்பான், கொரியா, இந்தோனேசியா உள்பட பல வெளிநாடுகளுக்கு சென்ற நமது முன்னோர்கள், இதே கொள்கைகளைத்தான் அங்கும் பரப்பினர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கிய இந்தியா, தனது மனிதாபிமானத்தை காட்டியது. அதேபோல், நெருக்கடியான நிலையில் சிக்கிய இலங்கைக்கும் துணையாக நின்றது. இந்தியா வல்லரசாக மாறும் போது ஒவ்வொரு குடிமகனும் சக்திவாய்ந்தவராக மாறுவார்கள்'' என்றார்.

இஸ்லாமிய தலைவர்களை
சமீப நாட்களாக இஸ்லாமிய தலைவர்களை மோகன் பகவத் சந்தித்து பேசி வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த மாதம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரோஷி மற்றும் டெல்லி முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், அலிகார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் உத்தின் ஷா, முன்னாள் எம்.பி ஷாகித் சித்திக் மற்றும் தொழில் அதிபர் சையத் ஷீர்வானி ஆகியோரையும் மோகன் பகவத் சந்தித்து பேசியிருந்தார்.

இமாம் அமைப்பின் தலைவர்
இந்த சந்திப்பு குறித்து பேசிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி, நாட்டில் தற்போது நிலவும் சூழல் தனக்கு கவலை அளிப்பதாகவும் தற்போதுள்ள சூழல் மிகவும் தவறானது. ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையுடன்தான் நாடு முன்னேற முடியும் என்று மோகன் பகவத் கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்புதான், டெல்லியில் உள்ள முக்கிய மதகுருவான அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸியை சந்தித்துப் பேசினார். மோகன் பகவத் இஸ்லாமிய தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications