"ரெடியா இருக்கோம்.. இந்தியாவுக்கு இன்னும் ஏதாவது வேணுமா".. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அதிரடி
ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் பேட்டி தந்துள்ளார்
டெல்லி: எங்களிடமிருந்து இந்தியா வேறேதும் வாங்க விரும்பினால், அது குறித்து நாங்கள் ஆலோசிக்கத் தயாராக இருக்கிறோம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது
இந்தியாவுக்கு எரிபொருள் தேவையை பெரும்பாலும் இறக்குமதி மூலமே எதிர்கொண்டு வருகிறது.. அவது, 85 சதவீதம் இறக்குமதி செய்து கொள்கிறது..
அதேபோல சமையல் எண்ணெய் தேவையிலும் சூரியகாந்தி எண்ணெய்யே அதிகமாக பயன்படுத்தப்படுவதால் அதையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியையே இந்தியா எதிர்பார்த்துள்ளது.

சூரியகாந்தி எண்ணெய்
இதனிடையே, சூரிய காந்தி எண்ணெய்யையும் ரஷ்யாவிடம் வாங்க இந்தியா முயற்சித்து வருவதாக செய்திகள் வந்தன. அதேபோல, இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வழங்குவதாக ரஷ்யா சொன்னதாவும், அதை இந்தியா பரிசீலித்துவருவதாகவும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரும் கூறியிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்திருக்கிறார் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்.. இவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்...

பேச்சுவார்த்தை
அப்போது ரஷ்ய வெளியுறவுத்துறை, ஜெய்சங்கரிடம் சொன்னதாவது: "அதிபர் புடினும், பிரதமர் மோடியும் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள்.. பிரதமர் மோடிக்கு அதிபர் வாழ்த்துகளை சொல்கிறார்.. வெளியுறவுக் கொள்கைகள், சுதந்திரம், தேசியநலன்களில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன என்று நம்புகிறேன்... உக்ரைன் விவகாரத்தில் நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று உங்களுக்கே தெரியம்.. அதனால் நாங்கள் எதையும் மறைக்க மாட்டோம்.. நீங்களும் எங்கள் நிலைப்பாட்டை ஒருதலைபட்சமாக கருதாமல் முழுமையாக எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

உக்ரைன்
இதற்கு பிறகு, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: "ரஷ்யாவிடமிருந்து இருந்து இந்தியா வேற ஏதாவது வாங்க வேண்டும் என்றும் விரும்பினால் நாங்கள் அது குறித்து ஆலோசிக்கத் தயாராக இருக்கிறோம்... இந்தியா ஒரு முக்கியமான தேசம்... இந்தியா ஒருவேளை உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்தால் அதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியே..

கூட்டாளி
காரணம், இந்தியா எங்களின் பொதுவான கூட்டாளி... நாங்களும் உக்ரைனுடன் பாதுகாப்பு நிமித்தமாகத்தான் பேசி வருகிறோம்... ஆனால் மேற்கத்திய நாடுகள் இது எதையுமே கண்டுகொள்ளவில்லை.. இந்தியா விரும்பினால் சமாதானம் செய்யலாம்.. ரஷ்யாவை போலவே, இந்தியாவின் வெளியுறவு கொள்கை சுதந்திரமாக செயல்படுகிறது... ஆனால் அமெரிக்கா அப்படியெல்லாம் கிடையாது.. தங்களுடைய அரசியல் கொள்கையைதான் பின்பற்ற வேண்டும் என்று பலநாடுகளை நிர்பந்திக்கிறது." என்றார்..

சூரியகாந்தி எண்ணெய்
இந்தியா எதை வாங்க விரும்புகிறதோ அதை பற்றி விவாதிக்கவும், அவற்றை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ரஷ்யா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பெருத்த நம்பிக்கையை இந்தியாவுக்கு ஏற்படுத்தி உள்ளது.. எப்படியும் சூரியகாந்தி எண்ணெய்யை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய இந்தியா உதவி கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!












Click it and Unblock the Notifications