நாங்க ரெடி.. ஒரு நாடு, ஒரு தேர்தல் நடத்த தயார்.. இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுஷில் சந்திரா அதிரடி
டெல்லி:‛‛ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல ஆலோசனை. ஆனால் இதை நடைமுறைப்படுத்த அரசியலமைப்பில் மாற்றம் தேவை. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான திறன் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இதனால் நாங்கள் தயாராக உள்ளோம்'' என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுஷில் சந்திரா கூறினார்.
Recommended Video
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் இந்த தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். குறிப்பாக உத்தர பிரதேச மாநில தேர்தல் முடிவுகளை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனென்றால் இது 2024ல் நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கலாம்.

கருத்து கணிப்பு முடிவுகள்
முன்னதாக மார்ச் 7 ல் 5 மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் உத்தர பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி, உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு என கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

சமாஜ்வாதி குற்றச்சாட்டு
ஆனாலும் கருத்து கணிப்பு முடிவுகளை அகிலேஷ் யாதவ் மறுத்தார். சமாஜ்வாதி கட்சி உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் என அவர் கூறினார். இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்படுவதாகவும், முறைகேடு நடப்பதாகவும் சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. குறிப்பாக வாரணாசியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டு முறைகேடு நடப்பதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் குற்றம்சாட்டினார். மேலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை அக்கட்சியினர் பைனாகுலர் மூலம் கண்காணித்ததோடு, குப்பை வண்டியில் இவிஎம் உள்ளதா என சோதனையும் நடத்தினர்.

முறைகேட்டிற்கு இடமில்லை
இதற்கு இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுஷில் சந்திரா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என்ற வார்த்தைக்கே இடமில்லை. 2004 முதல் தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2019 முதல் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை துவங்கியுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ‛ஸ்ட்ராங்' அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை தினத்தன்று தான் அங்கிருந்து வெளியே கொண்டு வரப்படுகிறது.

விளக்கம்
மேலும் ஓட்டு எண்ணிக்கை வெளிப்படையாக நடக்கிறது. அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஓட்டு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வாரணாசியில் இவிஎம் இயந்திரங்கள் பயிற்சி நோக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த இயந்திரத்தை ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தியதற்கான சீல் இல்லை. இதில் தவறு என்னவென்றால் இதுபற்றி அரசியல் கட்சிகளிடம் கூறாதது தான். இதுபற்றி கேள்வி எழுப்பிய கட்சிகளிடம் விளக்கி கூறினோம். ஓட்டுக்கள் பதிவான இவிஎம் இயந்திரங்களை ஸ்ட்ராங் அறையில் இருந்து எடுக்க முடியாது.

ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு தயார்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல ஆலோசனை. ஆனால் இதை நடைமுறைப்படுத்த அரசியலமைப்பில் மாற்றம் தேவை. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஒரேநாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான திறன் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.

திருத்தம் வேண்டும்
அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற 3 பாராளுமன்ற தேர்தல்களிலில் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன்பிறகு சட்டசபை கலைத்தது, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பங்களால் இந்த முறை மாறியது. தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல ஆலோசனை. ஆனால் 5 ஆண்டுக்குள் சட்டசபையை கலைப்பதை ஒழிப்பது அல்லது அதற்கேற்ப பாராளுமன்றத்தின் ஆயுளை நீட்டிப்பது குறித்து யோசிக்க வேண்டியது அவசியமாகி உள்ளது'' என்றார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications