சூரிய கிரகணம்.. பல பிரபல கோவில்களில் நடையடைப்பு.. உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோவில் திறந்தே உள்ளது
டெல்லி: பகுதி சூரிய கிரகணத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள பல கோவில்களில் நடை அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலில், கிரஹண காலத்தில் கூட பக்தர்கள் தரிசிக்க முடியும்.
இன்றைய சூரிய கிரகணத்தின் போதும் மகாகாலேஸ்வரர் கோயில் திறந்திருக்கும். உஜ்ஜயின் கோவிலுள்ள சிவபெருமான் காலத்தின் ஈஸ்வரன் என பூஜிக்கப்படுவதால் அவர் கிரகண காலம் பற்றி கவலையற்றவர் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.

அதேநேரம், பூஜை நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கோவிலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் வழிபாட்டின் நேரமும் மாற்றப்பட்டு இரவு 7 மணிக்கு நடைபெறும். போக் ஆரத்தி மாலை 6:30 மணிக்கு நடைபெறுவது வழக்கம். இன்று அந்த பூஜை இரவு 8 மணிக்கு நடைபெறும்.
கிரகணத்தின் போது பக்தர்கள் கருவறைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோயிலின் அர்ச்சகர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்ல முடியும்.

கிரகணம் முடிந்தவுடன் கோவில் சுத்தம் செய்யப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கருவறையும் கூட கழுவப்படுகிறது. சூரிய கிரகணம் இன்று மாலை 4.29 மணி முதல் மாலை 6.30 மணி வரை நிலவுவது குறிப்பிடத்தக்கது. 2 மணி நேரம் நீடிக்கும் கிரகணத்தின் போது, காலபைரேஸ்வரரை பூஜாரிகள் தியானிக்கிறார்கள். ஆனால் சிவலிங்கத்தை தொட மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில், கேதர்நாத், பத்ரிநாத் கோவில்கள் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் நடை அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications