Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் இந்தியாவில் லாக்டவுன் வருமா! அச்சுறுத்தும் கொரோனா.. வல்லுநர்கள் சொல்வது என்ன! பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனா உள்ளிட்ட சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் வருமா என்ற அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு வல்லுநர்களும் ஒரே விதமான கருத்தையே கூறுகின்றனர்.

சீனாவில் இப்போது கொரோனா பரவல் நிலைமை கைமீறிச் சென்றுவிட்டது. இவ்வளவு காலம் எந்த ஜீரோ கோவிட் பாலிசி அங்கு கொரோனாவை கட்டுக்குள் வைக்க உதவியதோ, அதே ஜீரோ கோவிட் பாலிசி தான் நிலைமை கைமீறிச் செல்லவும் இப்போது காரணமாக அமைந்துவிட்டது.

அங்கு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வருகிறது. நிலைமை ரொம்பவே மோசமாக இருப்பதை உணர்ந்த அந்நாட்டு அரசு தினசரி கோவிட் பாதிப்பு குறித்த விவரங்களைப் பகிர்வதைக் கூட நிறுத்திக் கொண்டது. வரும் நாட்களில் அங்கு நிலை மேலும் மோசமாகும் என்றும் அஞ்சப்படுகிறது.

சீனா

சீனா

சீனாவில் இப்போது நிலைமை மோசமாகியுள்ளது உலகெங்கும் ஒரு அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஏனென்றால் கொரோனா தொடங்கிய போது, முதலில் சீனாவில் தான் இதேபோல வைரஸ் பாதிப்பு மோசமாக இருந்தது. அதை உலக நாட்கள் முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், சில வாரங்களிலேயே இந்த கொரோனா பாதிப்பு உலகெங்கும் பரவியது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டன. வல்லரசு நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்துமே கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாம் இன்னுமே கூட முழுமையாக மீளவில்லை.

இந்தியா

இந்தியா

இந்தச் சூழலில் மீண்டும் சீனாவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இருப்பினும், சீனாவைக் காட்டிலும் மற்ற நாடுகளில் நிலைமை எவ்வளவோ மேல் எனச் சொல்லலாம். குறிப்பாக, இந்தியாவில் வேக்சின் பணிகள் சிறப்பாகவே நடைபெற்றன. சீனாவில் இப்போது பிஎப்7 வகை ஓமிக்ரான் தான் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேக்சினுக்கு கட்டுப்படும் என்பதாலும் இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதாலும் நாம் பெரியளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

 அச்சம்

அச்சம்

சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதை மத்திய அரசும் கவனித்தே வருகிறது. இந்தியாவில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலை சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிப்பது அல்லது ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றே வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவில் ஏற்பட்டதை போல இந்தியாவில் நிச்சயம் கொரோனா பாதிப்பு ஏற்பாட்டது. ஏனென்றால் இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஏற்கனவே கொரோனா வந்து சென்றுவிட்டதால், இயற்கையாகவே தடுப்பாற்றல் உள்ளது.

 பயண கட்டுப்பாடுகள்

பயண கட்டுப்பாடுகள்

இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "இந்தியாவில் இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இப்போதைய சூழலில் சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் ஏற்கனவே இந்த ஓமிக்ரான் பிஎப்7 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களிலும் கூட நாம் விமானங்களுக்குத் தடை விதித்திருந்தோம். ஆனால், அது பெரியளவில் நமக்குப் பலன் தரவில்லை. எனவே, இப்போதைய சூழலில் விமானங்களுக்கு தடை என்ற பேச்சே தேவையில்லை..

ஊரடங்கு

ஊரடங்கு

மேலும், இப்போது இந்தியர்களிடம் தடுப்பாற்றல் அதிகமாகவே உள்ளது. வேக்சினால் பெற்ற தடுப்பாற்றால், இயற்கையாகவே கொரோனா வந்து சென்றதால் ஏற்பட்ட தடுப்பாற்றல் என இரண்டுமே இருப்பதால், ஒரு வித hybrid தடுப்பாற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போதைய சூழலில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தேவையில்லை. மத்திய அரசு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேவையான வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. நாம் அதைப் பின்பற்றினாலே போதும்" என்று கூறுகிறார்கள்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இது குறித்து நுரையீரல் வல்லுநர் பேராசிரியர் டாக்டர் நீரஜ் குப்தா கூறுகையில், "சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போதைய சூழலில், இந்தியாவுக்கு லாக்டவுன் எதுவும் தேவையில்லை. கொரோனா மீண்டும் அதிகரிக்காமல் இருக்க நாம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.. உலகளவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, நாம் முழுமையாகப் பழைய நிலைக்குச் செல்ல முடியாது" என்றார்.

 துணை வேரியண்ட்கள்

துணை வேரியண்ட்கள்

அதேபோல, தொற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா, "பயணக் கட்டுப்பாடுகள் என்பது கொரோனா பரவலைத் தாமதப்படுத்துமே தவிர நிறுத்தாது என்பதே உண்மை. கடந்தாண்டு இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் ஏற்பட்ட போதே நாம் பார்த்தோம். பயண கட்டுப்பாடுகளால் பெரியளவில் பலன் இல்லை. இந்தியாவில் மட்டும் ஏற்கனவே பல ஓமிக்ரான் துணை வேரியண்ட்கள் உள்ளன. எனவே, பயண கட்டுப்பாடுகள் தேவையில்லாத ஒன்று. நாம் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை முறையாகக் கவனித்தாலே போதும்" என்று அவர் தெரிவித்தார்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+