டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Mucormycosis: உயிர்கொல்லியான கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?.. மூளையை தாக்கும் அபாயம்!

Google Oneindia Tamil News

டெல்லி: கட்டுக்குள் இல்லாத நீரிழிவு நோய், நீண்ட காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்த கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகார்மைக்கோசிஸ் எனப்படும் ஒரு உயிர் கொல்லி பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

Recommended Video

    Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

    இந்த நோய் மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதித்தவர்கள் அதிகரித்து கொண்டே வருகிறார்கள். இதையடுத்து மத்திய அரசும் இதுகுறித்து ஆதாரப்பூர்வமாக அறிவுரைகளை வழங்கியுள்ளது.

    இந்த நோய் தொடர்ந்து மருந்துகளை எடுப்போரை அதிகம் பாதிப்பதாக அரசு கூறுகிறது. இந்த நோய் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

    "மாப்பிள்ளை"க்கு ஒன்னு.. கொங்குவுக்கு ஒன்னு.. "செளத்"துக்கு இன்னொன்னு.. பரபரக்கும் திமுக!

    அரிதான நோய்

    அரிதான நோய்

    கருப்பு பூஞ்சை நோய் என்பது அரிதான நோயாகும். ஆனால் மிகவும் மோசமான பூஞ்சை தொற்று. சுற்றுச்சூழலில் இயற்கையாகவே இருக்கும் மியூகார்மைசிட்ஸால் ஏற்படுகிறது. எந்த நோயாளியாவது ஏற்கெனவே உடல் நிலை பாதிப்பு இருந்தாலோ அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதாலோ ஏற்படுகிறது.

    உரம்

    உரம்

    அதாவது மண் தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையாலும் இது ஏற்படுகிறது. மண், காற்றில் கூட இந்த பூஞ்சை இருக்கிறது. இந்த பூஞ்சைகள் நாம் சுவாசிக்கும் போது உள்ளே சென்று சைனஸ் அல்லது நுரையீரலை பாதிக்கிறது.

    அடிப்பட்ட காயங்கள்

    அடிப்பட்ட காயங்கள்

    அது போல் ஏதாவது வெட்டுக் காயங்கள், அடிபட்ட காயங்கள் மற்றும் தோலில் பாதிப்பு போன்றவற்றால் எளிதாக நுழைகிறது. இந்த நோய் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படுகின்றன என்பதை பார்ப்போம். கண்கள், மூக்கு பகுதியை சுற்றி வலி ஏற்படும். கண்கள் சிவத்தல், காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தியில் ரத்தம், மனநிலையில் மாற்றம் உள்ளிட்டவை ஏற்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    நோய் அறிகுறிகள்

    நோய் அறிகுறிகள்

    சைனுசைட்டீஸ்- மூக்கு அடைப்பு இருத்தல்
    ஒரு பக்கம் முகம் வீங்கி வலியை ஏற்படுத்துதல்
    மூக்கை சுற்றி கருப்பு நிறத்தில் இருத்தல்
    பல் வலி
    வலியுடன் கூடிய மங்கலான பார்வை அல்லது இரட்டை பார்வை
    தோலில் புண்கள்
    ரத்தம் உறைதல்
    மார்பில் வலி, மோசமான சுவாச அறிகுறிகள்

    ஆகியவை இருந்தாலும் கருப்பு பூஞ்சை நோய் என்பதை சந்தேகிக்கலாம். அது போல் கட்டுக்குள் இல்லாத நீரிழிவு நோய் இருந்தாலும் பெரும் பாதிப்பை கொடுக்கிறது.

    நோயை குணப்படுத்தலாம்

    நோயை குணப்படுத்தலாம்

    இதற்கு பூஞ்சை தொற்றை ஒழிக்கும் ஆன்டிபயாடிக்குகள் மூலமாக நோயை குணப்படுத்தலாம். மேலும் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மருந்துகளை எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பின்னரும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதனையிட வேண்டும்.

    English summary
    What is Black Fungus or Mucormycosis in Covid patiens? What are the symptoms and treatment?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X