பணம், கார்டு, மொபைல் கூட வேண்டாம்.. சிரித்தாலே போதும் நம் நாட்டில் பணம் அனுப்பலாம்! புதுசா இருக்கே
டெல்லி: ஃபெடரல் வங்கி இப்போது புதிதாக ஸ்மைல் பே (SmilePay) என்ற புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முகத்தை மட்டுமே வைத்து ஒரு நபரால் பேமெண்டை செய்ய முடியும். இந்த முறையில் பேமெண்ட் செய்யும் போது கார்டு அல்லது மொபைல் என எதுவும் தேவையில்லை.. சிரித்தால் போதும் என்கிறது ஃபெடரல் வங்கி.
வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தைக் கொடுக்க வங்கிகள் பலவித வசதிகளைக் கொண்டு வருகிறது. அதன்படி ஃபெடரல் வங்கி புதிதாக ஸ்மைல் பே (SmilePay) என்ற புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிரித்தால் போதும்: இது தொடர்பான விரிவான செய்திக்குறிப்பை ஃபெடரல் வங்கி நேற்றைய தினம் வெளியிட்டு இருந்தது. அதில் UIDAIஇன் பீம் ஆதார் பேயில் உள்ள மேம்பட்ட முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஸ்மைல் பே தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முகத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வரப்பட்டுள்ள முதல் பேமெண்ட் தொழில்நுட்பம் இதுவாகும்.
இந்த ஸ்மைல்பே தொழில்நுட்பத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் முகங்களை ஸ்கேன் செய்தாலே போதும், மிக எளிதாகப் பணம் அனுப்ப முடியும்.. கார்டு அல்லது மொபைல் மறந்து வைத்துவிட்டு வந்தால் மேமெண்ட் செய்ய முடியாத சூழல் இப்போது இருக்கும் நிலையில், அதை இந்த ஸ்மைல் பே தொழில்நுட்பம் நீக்குகிறது. இந்த முழு மேமெண்ட் செயல்முறையும் இரண்டே ஸ்டெப்களில் முடியும்.
புதிய அனுபவம்: இது தொடர்பாக ஃபெடரல் வங்கியின் சிடிஓ இந்திரனீல் பண்டித் கூறுகையில், "நாம் முதலில் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தோம். பின்னர் கார்டு, அதன் பின்னர் க்யூஆர் கோட்களை பயன்படுத்தினோம். இப்போது நாம் அணியும் வாட்ச் போன்ற சாதனங்களில் இருந்தும் பணம் செலுத்துகிறோம். அடுத்த கட்டமாகப் பணம் செலுத்த ஒரு புன்னகை மட்டும் போதும். இது வாடிக்கையாளர்களுக்கு புது வித அனுபவத்தைத் தரும்" என்றார்.
முக்கிய அம்சங்கள்: இனி வாடிக்கையாளர்கள் வெளியே செல்லும் போது பணம், கார்டு அல்லது மொபைல் என பேமெண்டிற்கு எதையும் எடுத்துச் செல்ல தேவையில்லை. இந்த மேபெண்ட் நொடிகளில் முடியும் என்பதால் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எளிதாக கட்டுப்படுத்த முடியும். UIDAI தொழில்நுட்பம் இதன் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதன் மூலம் ஸ்மைல் பே பாதுகாப்பான மற்றும் நம்பகமான பரிவர்த்தனைகளை உறுதி செய்கிறது. இதில் மேபெண்ட் செய்வது ரொம்பவே ஈஸி.. ஒரே ஒரு புன்னகை இருந்தால் போதும் எளிதாகப் பணத்தைச் செலுத்தலாம்.
யாருக்கு: முதற்கட்டமாக இந்த வசதி ஃபெடரல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதாவது வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இரு தரப்பும் ஃபெடரல் வங்கியில் இருந்தால் மட்டுமே இப்போது இந்த மேபெண்ட் முறை வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக இந்த சேவை மெல்ல விரிவு செய்யப்படும் என்று பெடரல் வங்கி அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ஸ்வதந்த்ரா மைக்ரோ ஃபைனான்ஸ் முதற்கட்டமாக இந்த திட்டத்தைச் சோதனை முறையில் கொண்டு வர உள்ளனர்.
எப்படி: வாடிக்கையாளர்கள் முதலில் "FED MERCHANT" செயலியின் செக் அவுட்டில் தங்கள் கட்டண முறையாக SmilePayஐ தேர்வு செய்ய வேண்டும். வாடிக்கையாளர் முதலில் ஆதார் எண்ணை டைப் செய்து FED MERCHANT APP செயலியில் பேமெண்டை தொடங்க வேண்டும். அடுத்த கட்டமாக மொபைலில் உள்ள கேமராவில் வாடிக்கையாளர்களின் முகத்தை ஸ்கேன் செய்தால் போதும்.. அப்போது UIDAI அமைப்பில் இருக்கும் டேட்டா உடன் அது சரிபார்க்கப்படும்.
அது சரிபார்க்கப்பட்ட உடன் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டு வணிகர்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். இந்த பிராசஸ் முடிந்தவுடன் FED MERCHANT APP செயலியில் வாய்ஸ் மூலம் இது உறுதி செய்யப்படும்.
கட்டுப்பாடுகள் என்ன: இந்த ஸ்மைல் பே மூலம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 5,000 வரை செலுத்தலாம். மேலும், ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை செலுத்த முடியும். இந்த முறையில் மேபெண்ட் செய்ய வாடிக்கையாளர்கள், வணிகர்கள் என இரு தரப்பும் ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே கண்டிஷன் ஆகும்.












Click it and Unblock the Notifications