3வது கட்ட பேச்சுவார்த்தையில் கர்ப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்வைத்த 3 முக்கிய நிபந்தனைகள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போராடிய மாணவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் 5 அம்ச தேர்வு சீர்திருத்தக் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் ஏற்கப்படுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை திரும்பப் பெறுவதாக CJP கட்சி அறிவித்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த சில வாரங்களாக நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்று வந்த மாபெரும் தொடர் போராட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

What were the three key demands put forward by the CJP during the third round of talks

மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மத்திய அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் சிஜேபி வைத்த 3 கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்ற நிலையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டத்தைக் கைவிடுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

சிஜேபி முன்வைத்த கோரிக்கைகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். நீட் தேர்வால் உயிரிழந்த அனைத்து மாணவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்தப் போராட்டத்தில் இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாகப் பங்கேற்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனால், தலைநகர் டெல்லி முழுவதும் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வந்தது.

பேச்சுவார்த்தை

கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு தரப்பில் இருந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகளுடன் அவசரப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சக செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவினர், சிஜேபி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா

நாட்டின் சூழலை கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், நீட் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதற்கு தான் பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறியுள்ள தர்மேந்திர பிரதான், மோசடி கும்பல்களின் சதியால் மாணவர்களின் எதிர்காலம் வீணாகி விடக்கூடாது என்பதில் தான் மிகுந்த உறுதியுடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தர்மேந்திர பிரதான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து பாஜக அமைச்சர்கள் உடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில், சிஜேபியின் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

3வது கட்ட பேச்சுவார்த்தையில் 3 நிபந்தனைகள்

போராடிய மாணவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும். நீட் தேர்வு முறைகேடுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் 5 அம்ச தேர்வு சீர்திருத்தக் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்தது சிஜேபி.

இந்த கோரிக்கைகள் ஏற்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் டெஹ்ரிவிக்கப்பட்டது. மத்திய அரசு அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து, டெல்லி போராட்டத்தை நல்லெண்ண அடிப்படையில் உடனடியாகக் கைவிடுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+