Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எங்களை வளர்க்க அவ்வளவு கஷ்டப்பட்டார்.." பேசும்போதே தழுதழுத்த பிரதமர்.. தாயை நினைத்து கண்கலங்கினார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை காலமானார். தனது குடும்பத்தில் அவர் தாயாருடன் மட்டுமே நெருக்கமாக இருந்து வந்தார். இதற்கிடையே முன்பு ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது தாயார் குறித்துப் பேசும்போது கண்கலங்கி அழுத வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி குஜராத்தில் வசித்து வந்தார். எப்போது குஜராத் சென்றாலும், தனது தாயாரைச் சந்திப்பதைப் பிரதமர் மோடி வழக்கமாகவே செய்திருந்தார். தனது குடும்பத்தில் அவர் தாயாருடன் மட்டுமே நெருக்கமாக இருந்து வந்தார்.

கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு காரணமாக ஹீராபென் மோடிக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை மோசமான நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தாயார் மறைவு

தாயார் மறைவு

தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் ஹீராபென் வசித்து வந்தார். கடுமையான உடல் வலி, மூச்சுத் திணறல் அவருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்த தனது தாயாரைப் பிரதமர் மோடியும் நேரில் சென்று சந்தித்திருந்தார். இதற்கிடையே இன்று அதிகாலை 1 மணிக்குப் பிறகு, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து அதிகாலை 3.30 மணி அளவில் ஹீராபென் காலமானார். இத்தகவல் பிரதமர் அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி உடனடியாக டெல்லியில் இருந்து குஜராத் சென்றார்.

பழைய வீடியோ

பழைய வீடியோ

அங்குப் பிரதமரின் தாயார் ஹீராபெனின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன. பிரதமர் மோடி தனது தாயுடன் சிறப்பான ஒரு பந்தத்தை வைத்திருந்தார். இதற்கிடையே தனது தாயார் தங்களை வளர்க்கச் சிறு வயதில் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டார் என்பதை விளக்கும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது வேகமாக டிரெண்டாகி வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு ஃபேஸ்புக் தலைமையகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது, ​​பிரதமர் மோடி, வீட்டுச் செலவுகளைச் சமாளிக்கத் தாய் ஹீராபாவின் போராட்டங்களைப் பற்றிப் பேசினார்.

சிறு வயதில்

சிறு வயதில்

அப்போது அவரையே அறியாமல் கண் கலங்கிவிட்டார் பிரதமர் மோடி. கடந்த 2015இல் நடந்த அந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கலந்துரையாடினார். அதில் பிரதமர் மோடியிடம் அவரது தாயார் குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் கேள்வி எழுப்பினார். அதற்குப் பிரதமர் மோடி, "நாங்கள் சிறுவயதில் இருந்த போது, எங்கள் தாயார் அண்டை வீடுகளுக்குச் சென்று பாத்திரம் கழுவுவது, தண்ணீர் எடுத்து வருவது போன்ற வீட்டு வேலைகளைச் செய்து வந்தார்.

கலங்கிய பிரதமர் மோடி

கலங்கிய பிரதமர் மோடி

ஒரு தாய் தன் குழந்தைகளை வளர்க்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர் செய்தார். எனது தாய் மட்டுமில்லை.. நாட்டில் உள்ள பல லட்சம் தாய்மார்களும் தங்கள் குழந்தைகளை வளர்க்க எந்த அளவுக்கும் கஷ்டப்படத் தயாராகவே உள்ளனர். குழந்தைகள் தங்களைப் போலக் கஷ்டப்படக் கூடாது என்று அவர்கள் நனைப்பதே இதற்கான காரணம்" என்று கூறி அவர் கண் கலங்கினார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

பிரதமர் மோடி மடல்

பிரதமர் மோடி மடல்

முன்னதாக கடந்த ஜூன் மாதம் தாயார் ஹீராபென் மோடியின் 100ஆவது பிறந்த நாளுக்காகப் பிரதமர் மோடி சிறு தொகுப்பு ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர், "வாட்நகரில், எங்கள் குடும்பம் சிறிய வீட்டில் வாழ்ந்து வந்தது. கழிப்பறை, குளியலறை, ஜன்னல் கூட இல்லாத ஒரு சிறிய வீடு அது.. மண் சுவர்கள் மற்றும் கூரை கொண்ட அதுதான் எங்கள் வீடு.. அதில் தான் நாங்கள் தங்கியிருந்தோம். எனது அம்மா எளிதா உணவு சமைக்க மூங்கில் குச்சிகள் மற்றும் மரப்பலகைகளால் என் தந்தை ஒரு தடுப்பைச் செய்தார். அதுதான் எங்கள் சமையலறை. நாங்கள் அனைவரும் ஒன்றாகவே அமர்ந்து சாப்பிடுவோம்.

குடும்பம்

குடும்பம்

பற்றாக்குறை எப்போதும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால், அந்த சூழலிலும் குடும்பத்தில் கவலையை ஏற்படாமல் எங்கள் பெற்றோர் பார்த்துக் கொண்டனர். பெற்றோர் இருவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றினர். அம்மா வீட்டிற்கு உதவ ஒரு சில வீடுகளில் பாத்திரங்களைக் கழுவுவார்கள். இந்த கூடுதல் காசை வைத்து எங்களை வெளியே அழைத்துச் செல்வார். பருத்தி உரித்தல் முதல் நூல் நூற்பு வரை அனைத்தையும் செய்வார். கடினமான வேலைகளைக் கூட தயங்காமல் செய்வார். அவர் எப்போதும் மற்றவர்களை நம்பி இருந்ததே இல்லை" என்று அவர் அதில் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+