வங்கக் கடலில் இன்று உருவாகிறது அசானி புயல்.. எங்கு கரையை கடக்கிறது?.. எங்கெல்லாம் பாதிப்பு
டெல்லி: வங்கக் கடலில் அசானி புயல் இன்று உருவாகிறது. இது எங்கு கரையை கடக்கும் என்பது குறித்து இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
Recommended Video

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து இன்று புயலாக மாறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயரிடப்பட்டுள்ளது.

அசானி புயல்
இந்த நிலையில் அசானி புயல் அந்தமான் தீவுகளில் இருந்து மியான்மர் மற்றும் தெற்கு வங்காளதேச கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா தெரிவித்துள்ளார். அந்தமான் தீவுகளில் புயல் கரையை கடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தமான் தீவுகள்
அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு 200 கி.மீ. வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியிலும் அந்தமான் தீவுகளுக்கு 100 கி.மீ. தெற்கு மற்றும் தென்கிழக்கிலும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்று புயலாக மாறும் நிலையில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
நடுக்கடலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு இந்திய கடற்படை சார்பில் விமானம், கப்பல்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுரை வழங்கப்பட்டது. இந்த புயல் வலுவடைந்து வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம், வடக்கு மியான்மர்- வங்கதேசம் இடையே கடலோர பகுதியில் மார்ச் 22 ஆம் தேதி கரையை கடக்கும். இந்தியாவுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

எங்கே கடக்கிறது?
அந்தமான் நிகோபர் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை வரை மூடப்பட்டுள்ளது. அந்தமான் நிர்வாகம் சார்பில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அசானி புயலால் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், மற்றும் புதுவையின் ஒரு சில பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல், மழையால் சிக்கியவர்கள் 03192- 245555 அல்லது 232714 என்ற உதவி எண்ணையோ 1-800-345-2714 என்ற டோல் ப்ரீ எண்ணையோ அணுகலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications