மம்தாவுக்கே டஃப் கொடுத்த ஜெகதீப் தன்கர்! துணை குடியரசு தலைவர் வேட்பாளர் ஆனது எப்படி? பின்னணி என்ன?
டெல்லி : பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநரான ஜெகதீப் தன்கர் பாஜக ஆட்சி மன்ற குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளார். வெங்கையா நாயுடு, முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி துணை குடியரசு தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? அவரது பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்காக பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19 கான கடைசி நாளாகும். வரும் ஆகஸ்ட் மாதம் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெகதீப் தன்கர் அறிவிப்பு
குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு ஆளும் கட்சியான பாஜக சார்பில் இந்த முறை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இதனால், குடியரசு துணைத் தலைவர் பதவியை மீண்டும் வெங்கையா நாயுடுவுக்கு வழங்கலாமா அல்லது முக்தார் அப்பாஸ் நக்விக்கு வழங்கலாமா என்பது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வந்தது. இந்நிலையில் தான் மேற்கு வங்க ஆளுநரான ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு குறித்து மிகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர் தேர்வில் பல்வேறு சாதக பாதக அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பாஜக ஆட்சி மன்ற குழு
இந்நிலையில் தான் மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கரை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாஜக ஆட்சி மன்ற குழு அறிவித்துள்ளது இது தொடர்பான அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. ஜெகதீப் தன்கர், 18 மே 1951 அன்று ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கித்தானா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். சித்தோர்கர் சைனிக் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், செய்ப்பூர், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

ஜெகதீப் தன்கர் வரலாறு
பின்னர் தீவிர அரசியலில் நுழைந்த அவர், ராஜஸ்தானில் சுன்சுனூ மக்களவைத் தொகுதியிலிருந்து 1989-91இல் ஜனதா தள கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ராஜஸ்தானின் கிஷன்கர்ட் தொகுதியிலிருந்து 1993-98இல் ராஜஸ்தானின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மேலும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் முன்னாள் தலைவருமான இவரை,2019 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மேற்கு வங்க ஆளுநராக நியமித்தார்.

மம்தா பானர்ஜியுடன் மோதல்
மேற்குவங்க ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும் மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜிக்கும் மோதல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக பல்வேறு கடிதங்களில் மம்தாவை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த தன்கர், அதிகாரிகளை வேலைக்காரர்கள் போல் நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி வந்தார். மேற்கு வங்க ஆளுநர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டுமென பலத்த கோரிக்கைகள் எழுந்த நிலையில் தான் தற்போது அவர் பாஜக குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி!












Click it and Unblock the Notifications