குடியரசுத் தலைவர் தேர்தல்..99 சதவீத வாக்குகள் பதிவு.. ஜூலை 21ல் ரிசல்ட் - வெல்லப்போவது யார்?
தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 சட்டசபைகளில் நடைபெற்ற வாக்குப்பதிவுகளில் 100 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நாட்டின் 16வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்களிப்பு நேற்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் 99.18% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் பி.சி. மோடி கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதை அடுத்து இன்று புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர். நேற்று காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக வாக்குச்சீட்டு நடைமுறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இதன்படி எம்பிக்களுக்கு பச்சை நிறத்திலும், எம்எல்ஏக்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டது.

எம்.பி, எம்எல்ஏக்கள்
எம்.பிக்கள் வாக்களிப்பதற்காக டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலும், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பதற்காக அந்தந்த மாநில சட்டமன்றத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்து வாக்குப்பதிவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர், பிரஹலாத் ஜோஷி, அனுராக் தாகூர் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதேபோன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக-வின் ஹேமா மாலினி உள்ளிட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த முதல்வர் மு.க ஸ்டாலின் தனது முதல் வாக்கினை பதிவு செய்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் நாசர், ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் பிபிடி கிட் அணிந்து வந்து வாக்களித்தனர்.

மன்மோகன் சிங்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீல் சேரில் நாடாளுமன்றத்திற்கு வந்து உதவியாளர்கள் உதவியுடன் வாக்களித்தார். இதேபோல, ஆம்ஆத்மி எம்.பி., ஹர்பஜன் சிங், பாஜக எம்.பி., கவுதம் காம்பீர் ஆகியோரும் வாக்களித்தனர்.

99.18% வாக்குகள் பதிவு
மாலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர், தலைமைத் தேர்தல் அலுவலர் பி.சி. மோடி செய்தியாளர்களிடம் பேசினார். நாட்டின் 16வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் 99.18% வாக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது.

வாக்குப்பெட்டிகளுக்கு சீல்
தேர்தல் ஆணையத்தால் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட 727 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 736 வாக்காளர்களில், 730 பேர் வாக்களித்தனர். பல்வேறு மாநிலங்களின் உதவி தேர்தல் அதிகாரிகள் இன்று மாலையே சாலைகள் மற்றும் விமானங்கள் வழியாக சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளுடன் வரத் தொடங்குவார்கள். டெல்லி விமான நிலையத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக எடுத்து செல்ல தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தலைமைத் தேர்தல் அலுவலர் பி.சி. மோடி கூறியுள்ளார்.

ஜூலை 21ல் ரிசல்ட்
சென்னை சட்டசபை வளாகத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், தேர்தல் பார்வையாளரான சட்டமன்றச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் வாக்குப்பெட்டிக்கு சீல்வைக்கப்பட்டது. அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் விமானம் நிலையம் கொண்டுசெல்லப்பட்டது. விமானத்தில் அதிகாரிகள் இருக்கைக்கு அருகிலேயே வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு, டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை வரும் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர் யார் என்று அன்றைய தினமே தெரிய வந்து விடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications