ஒரே ஒரு கையெழுத்து.. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய மறுப்பது ஏன்? மத்திய அரசின் பிளான் இதுதான்!
டெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் மத்திய அரசு இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. மத்திய அரசின் இந்த பிடிவாதத்திற்கு காரணம் என்ன? என்பதை விரிவாக பார்ப்போம்.
நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது முதல் கடுமையாக விமர்சனங்கள் வந்துக்கொண்டேதான் இருக்கின்றன. அதுவரை அரசு பள்ளிகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவராகலாம் என்கிற நிலை இருந்தது. ஆனால், நீட் தேர்வு கொண்டு வந்த பின்னர்.. இந்த நிலைமை மாறியது. பணம் உள்ளவர்கள் மட்டும் கோச்சிங் சென்ட்டரில் சேர்ந்து மருத்துவம் பயின்று.. மருத்துவராகலாம் என்கிற நிலை ஏற்பட்டது.

வினாத்தாள் கசிவு
இப்படியாக நீட் கொண்டு வரப்பட்ட பின்னர்.. வினாத்தாள்கள் கசிந்ததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏதோ ஒருமுறை, இரண்டுமுறை என்று லீக் ஆகிறது என்றால் கூட ஓகே.. ஆனால் 150க்கும் அதிகமான முறை நீட் வினாத்தாள்கள் கசிந்திருக்கின்றன. எனவேதான் மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
பரவிய போராட்டம்
டெல்லியை தாண்டி.. தமிழகம், கேரளம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா.. என போராட்டம் பல்வேறு மாநிலங்களுக்கும் விரிவடைந்திருக்கிறது. ஆனாலும் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்வதாக தெரியவில்லை. இந்த போராட்டங்களை லீட் செய்துக்கொண்டிருக்கும் கரப்பான் ஜனதா கட்சி (சிஜேபி) பிரதிநிதிகள், நேற்று மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜித்தேந்திர சிங் உள்ளிட்டோரை சந்தித்திருந்தனர்.
இந்த சந்திப்பின்போது தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய 24 மணி நேரம் கெடு விதித்திருந்தனர். கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் இன்னும் ராஜினாமா அறிவிக்கப்படவில்லை. இதனால் மேலும் போராட்டம் தீவிரமடையும் என்று சொல்லப்படுகிறது.
மத்திய அரசின் பிளான்
சரி எதற்கு இந்த போராட்டங்களை தீவிரமடைய விட வேண்டும்? மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டியதுதானே! என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். மத்திய அரசு இதற்கு தயாராக இல்லை. காரணம், போராட்டம் நடத்தும் அமைப்பின் அழுத்தத்திற்கு அரசு பணிந்துவிட்டது என்கிற பிம்பம் உருவாகிவிடக்கூடாது என பாஜக அஞ்சுகிறது.
இன்னைக்கு தர்மேந்திர பிரதான் சரியில்லை என்று கேட்பவர்கள், நாளை வேறு அமைச்சர்களின் பெயரை சொல்லி போராட்டத்தில் ஈடுபடுவார்கள். கடைசியில் பிரதமருக்கு எதிராகவே போராட்டம் வெடிக்கும். இதற்கு முடிவே கிடையாது என்று மத்திய அரசு கருதுகிறது. எனவேதான் ராஜினாமாவுக்கு இறங்கி வரவில்லை.
வேறு நடவடிக்கை
தேபோல இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி முழுமையாக தனது கவனத்தில் எடுத்திருக்கிறார். தேர்வுகளை நடத்தும் என்டிஏ அமைப்பில் தீவிரமான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளார். இதுவரை 47 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். ராஜினாமாவை விட நிர்வாக சீர்திருத்தம்தான் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் கருதுகிறது.
மாணவர்களின் கோரிக்கை
அதேபோல ராஜினாமா தவிர, மாணவர்களின் மற்ற கோரிக்கைகளையும் ஏற்க மத்திய அரசு ரெடியாக இருக்கிறது. அதனால்தான் என்டிஏ அமைப்பில் சீர் திருத்தத்தைதொடங்கியிருக்கிறது. மட்டுமல்லாது போராடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாது என்று கூறியிருக்கிறது. நீட் தேர்வு காரணமாக உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், நீட் வினாத்தாள் லீக் ஆனால் 10 ஆண்டுகள் விரை கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் என்கிற சட்டத்தை கொண்டுவரும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இதெல்லாம் செய்தாலும் கூட.. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே மாணவர்களின் முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
