அவசரம்.. அவசரம்.. உச்ச நீதிமன்றத்தில் முட்டி மோதிய எடப்பாடி! சிரித்த ஓபிஎஸ்.. இவ்வளவு பெரிய காரணமா?
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறார். அவரின் இந்த கோரிக்கைக்கு பின் முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பொதுக்குழு மூலம் இவர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உடனே உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் இரட்டை நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது . இந்த வழக்குதான் தற்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த பொதுக்குழு சட்ட விரோதமாக கூடியதாக ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம்: பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடை நீட்டிப்பு- டிச.6-ல் விசாரணை

2 தீர்ப்புகள்
இதில் தனி நீதிபதி அமர்வு பொதுக்குழு கூடியது தவறு என்று தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி தரப்பு செய்த மேல்முறையீட்டில் உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு பொதுக்குழு கூடியது சரிதான் என்று தீர்ப்பு வழங்கினார்கள். இதில் இப்படி மாறி மாறி தீர்ப்புகள் வந்த நிலையில்தான் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. இந்த வழக்கில் நேற்று விசாரணை நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல்நாள் கூடிய அமர்வு.. நேற்றைய விசாரணையை தள்ளி வைத்தது. நீதிபதிகளின் வேறு அமர்வுகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. டிசம்பர் 6-இல் திட்டமிட்டபடி நடைபெறும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு வழக்கை 13ம் தேதிக்கு அடுத்த மாதம் தள்ளி வைக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை வைத்தது.

ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை
ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை வேண்டுமென்றே தாமதம் செய்ய மனுதாரர் தரப்பு பார்க்கிறது. இடைக்கால தடை காரணமாக கட்சி பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. வழக்கை தள்ளி வைக்க வேண்டாம். உடனே விசாரியுங்கள். உடனே வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை 6ம் தேதியே விசாரிப்போம் என்று கூறியது. அதோடு 13ம் தேதி விசாரிக்கும் ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்தது.

நிராகரிப்பு
எடப்பாடி இப்படி உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக கோரிக்கை வைக்க காரணங்கள் இருக்கின்றன. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் நடப்பதாக ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. 6 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி தேர்தல் நடக்க உள்ள 6 மாதத்திற்கு மட்டுமே எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர். அதன்பின் அந்த பதவி காலாவதியாகிவிடும். அந்த வகையில் ஜனவரி மாதம் எடப்பாடியின் பதவி காலாவதியாகிவிடும். ஜனவரி 11ம் தேதிக்குள் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தி எடப்பாடி பொதுச்செயலாளர் ஆக வேண்டும். இதை தடுக்கவே ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறார். இதன் காரணமாகவே ஓ பன்னீர்செல்வம் இந்த வழக்கை முடிந்த அளவு தாமதப்படுத்த நினைக்கிறார் என்று கூறப்படுகிறது. தாமதம் ஆக ஆக தன்னுடைய கரங்கள் வலுப்படும் என்று அவர் நினைக்கிறார்.

ஓ பன்னீர்செல்வம் பிளான்
நிறைய நிர்வாகிகள் தன் பக்கம் வருவார்கள். எடப்பாடி கை வலிமை இழக்கும். கடந்த இரண்டு மாதத்தில் நிறைய நிர்வாகிகள், முக்கியமாக மேற்கு மண்டல நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் வந்துவிட்டனர். இது மேலும் தொடரும் என்று ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறார் என்று கூறப்படுகிறது. எடப்பாடி இப்படி அவசரப்படுவதை பார்த்து மடியில் கனமில்லை.. அதனால் பயமில்லை என்று ஓ பன்னீர்செல்வம் சிரித்தபடி கூலாக இருக்கிறாராம். வழக்கு இன்னும் தாமதமானால்.. தேர்தலை நடத்துவதில் சிக்கல் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். அதன் காரணமாகவே ஜனவரிக்கு முன் வழக்கை முடிக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீர்க்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிக்கல் மேல் சிக்கல்
அதிமுகவில் எடப்பாடி இப்போது நினைத்தாலும் தேர்தல் நடத்த முடியாது. அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவர் பொதுச்செயலாளர் என்றாலும்.. அவரால் இப்போது முடிவுகளை எடுக்க முடியாது. கோர்ட் இதற்கு இடைக்கால தடை விதித்து உள்ளது. இதன் காரணமாகவே அவரால் தேர்தலையும் நடத்த முடியவில்லை. தேர்தலை நடத்த கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த முறை விசாரணையின் போது இந்த இடைக்கால தடை நீக்கப்படும் என்று எடப்பாடி எதிர்பார்த்தார். இதற்கான கோரிக்கையையும் எடப்பாடி வைத்தார். ஆனால் இடைக்கால தடையை நீக்க உச்ச நீதிமன்றம்மறுத்துவிட்டது . வழக்கு விசாரணை முடியும் வரை இடைக்கால தடை இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது . இதன் அர்த்தம் வழக்கில் ஜனவரி 11ம் தேதி வரை விசாரணை நடந்தால், அதற்கு முன்பு எடப்படியால் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடியாது. மீண்டும் பொதுக்குழுவை கூட்டி அல்லது தேர்தல் நடத்துவதற்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட வேண்டி இருக்கும். இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கு அவசரமாக முடிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறாராம்.