கேரளா முதல் டெல்லி வரை, நாடு முழுக்க மழை, வெள்ளம் அதிகரிப்பு.. வெப்பமயமாதல் அல்ல.. வேறு என்ன காரணம்?
டெல்லி: டெல்லியில் 1960க்கு பிறகு அக்டோபர் மாதத்தில், மிக அதிக மழை இப்போது பதிவாகியுள்ளது. பெங்களூரிலும் பல வருடங்களுக்கு பிறகு அக்டோபரில் கன மழை பெய்தது, கேரள வெள்ள சூழ்நிலையை எதிர்கொள்கிறது. இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்திலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது.
உலக வெப்பமயமாதல் காரணமாக இவ்வாறு திடீரென்று மழை அதிகரிக்கிறதா என்று சிலர் கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

வானிலை வல்லுநர்கள்
சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் சமீபகாலங்களில் மிகப்பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டதை சுட்டிக்காட்டி இந்தியாவிலும் அதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் வானிலை வல்லுனர்கள் கருத்து வேறாக இருக்கிறது
பருவமழை தாமதமாக பெய்வது, பல இடங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது மற்றும் காற்று திசை திரும்புவது போன்ற காரணிகள் இதற்கு காரணம் என்று வானிலை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இரு காற்றழுத்த மண்டலங்கள்
கடந்த வாரம், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் ஒவ்வொன்றாக இரண்டு குறைந்த அழுத்த மண்டலங்கள் ஒரே நேரத்தில் உருவாகின. ஒட்டுமொத்தமாக, இவை கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் கடுமையான வானிலை பாதிப்புகளை ஏற்படுத்தின.

தென்மேற்கு பருவமழை காலம்
கடந்த வாரத்தின் பெரும்பாலான நாட்களில், குறைந்த பட்சம் இரண்டு குறைந்த அழுத்தங்கள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை மற்றும் மத்திய இந்தியா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி நாட்டின் பெரும் பகுதிகளில் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை காலம் பொதுவாக அக்டோபர் தொடக்கத்தில் முழுமையாக விலகும். அப்படி விலகும் நிலையில் போகிற போக்கில் இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையை ஏற்படுத்துகிறது.
Recommended Video

பருவமழை தொடர்கிறது
இந்த ஆண்டு, அக்டோபர் 6 -ம் தேதி முதல் செப்டம்பர் 17 -க்குள் தென் மேற்கு பருவமழை ஓயத் தொடங்கியது. இதுவரை, மேற்கு, வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் இருந்து பருவமழை முழுமையாக விலகிவிட்டது. ஆனால் அது தெற்கு தீபகற்பத்தில் இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால், கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கடந்த 10 நாட்களில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளது.

காரணங்கள்
திங்கள்கிழமை வரை, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் பகுதிகள் மற்றும் தெற்கு தீபகற்பம் பருவமழையை சந்தித்தன. இதெல்லாம் பருவமழை அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications