டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மே 17க்கு பின் ஊரடங்கு நீக்கப்படுமா? முக்கிய ஆலோசனை.. முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மீட்டிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா முழுக்க மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி நாளை மதியம் மூன்று மணிக்கு ஆலோசனை செய்ய உள்ளார்.

Recommended Video

    Reason behind sudden ease in lockdown in Tamilnadu

    நாடு முழுவதும் ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று முறை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதற்காக இந்தியாவை மொத்தம் மூன்று சோன்களாக மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது. சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என்று மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

    மலேசியாவில் ஜூன் 9 வரை லாக்டவுன் நீட்டிப்பு- பிரதமர் மொஹிதீன் யாசின்மலேசியாவில் ஜூன் 9 வரை லாக்டவுன் நீட்டிப்பு- பிரதமர் மொஹிதீன் யாசின்

    ஆலோசனை செய்தார்

    ஆலோசனை செய்தார்

    இந்தியாவில் ஒவ்வொரு முறை ஊரடங்கை நீட்டிக்கும் முன் பிரதமர் மோடி மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை செய்வது வழக்கம். இதுவரை ஐந்து முறை மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை செய்துள்ளார். எப்படி லாக்டவுனை அமல்படுத்தலாம், எப்படி கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று பிரதமர் மோடி ஆலோசனை செய்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் இந்தியா முழுக்க மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி நாளை மதியம் மூன்று மணிக்கு ஆலோசனை செய்ய உள்ளார்.

    நாளை மீட்டிங்

    நாளை மீட்டிங்

    நாளை மதியம் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு சென்றுள்ளது . நாளை நடக்கும் மீட்டிங்கில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் எடுக்கப்பட உள்ளது. லாக்டவுன் குறித்தும் கொரோனா பரவல் குறித்தும் இதில் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனர். இந்தியாவில் கொரோனா லாக்டவுனை முடிவிற்கு கொண்டு வரும் எண்ணத்தில் மத்திய அரசு இருப்பதாக கூறப்படுகிறது. 17ம் தேதிக்கு பின் மேலும் லாக்டவுன் நீட்டிக்கப்படாது என்று கூறுகிறார்கள்.

    விவாதம் செய்கிறார்கள்

    விவாதம் செய்கிறார்கள்

    இது தொடர்பாக நாளை விவாதம் செய்வார்கள்.அதோடு லாக்டவுனை நீக்கினால் எப்படி படிப்படியாக நீக்குவது.கட்டுப்பாடுகளை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்துவது என்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர். உடனடியாக கட்டுப்பாடுகளை தளர்த்தாமல் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப் போகிறார்கள் என்று ஆலோசனை செய்ய உள்ளனர். அதேபோல் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்ய இருக்கிறார்கள்.

    ஆய்வு குழு சென்றுள்ளது

    ஆய்வு குழு சென்றுள்ளது

    ஏற்கனவே இந்தியாவில் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் 10 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு குழுவை அனுப்பி உள்ளது. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்படி கட்டுப்பாடுகளை அதிகரிப்பது என்று இந்த குழு ஆலோசனைகளை வழங்கும். அதனால் இந்த மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Will lockdown get extended? PM Modi to hold a meeting with CMs tomorrow afternoon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X