கொடுத்த வாக்கை காப்பாத்தல.. மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம்.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறாவிட்டால், மீண்டும் ஒரு போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது.

Withdraw Cases or Face Fresh Protests CJP Warns Centre Over Police Action

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் சிஜேபி கட்சி வலியுறுத்தியது.

மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் வலுப்பெற்றதால் கடந்த 25 ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மற்ற கோரிக்கைகளையும் ஏற்பதாக மத்திய அரசு உறுதி அளித்ததை அடுத்து, அன்றைய தினமே போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களில் பலர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவை திரும்பப் பெறப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை சிஜேபி கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் ஆசுதோஷ் ரங்கா வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "போராட்டக்காரர்கள் மீது எந்தவிதமான காவல்துறை நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற உத்தரவாதம் முழுமையாக மீறப்படுகிறது. பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் கண்காணிக்கப்படுவதோடு, துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். போராட்டக்காரர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யும் தன்னார்வலர்கள் டெல்லியில் தடுத்து வைக்கப்படுவது குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றன.

போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மாணவர்களை விடுவிக்க வேண்டும். உடன்படிக்கையின்படி, டெல்லி காவல்துறை, மத்திய புலனாய்வு அமைப்புகள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களின் காவல்துறை ஆகியவை போராட்டக்காரர்கள் மீது இனி எந்த வழக்கும் பதியக் கூடாது என்று நாங்கள் கோருகிறோம். இல்லாவிட்டால், நாங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+