குழந்தைகள் Youtube Shorts பார்ப்பதிலேயே மூழ்கி இருக்காங்களா? இனி செல்போன் ரிமோட் நம் கையில்!
டெல்லி: குழந்தைகளின் செல்போன் பார்க்கும் பழக்கத்தை மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை யூடியூப் கொண்டு வந்துள்ளது. இது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். இனி குழந்தைகள் மணிக்கணக்கில் யூடியூப் ஷார்ட்ஸ் பார்க்க மாட்டார்கள்.
அந்த காலகட்டத்தில் நாமெல்லாம் குழந்தையாக இருந்த போது வெளியே சென்று ஓடியாடி விளையாடினோம். பின்னர் பெண்கள் பதின்ம வயதை எட்டியதும் வீட்டுக்குள்ளேயே பாண்டி, தாயம், பரமபதம், சோழி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடினர். ஆனால் இந்த காலத்து குழந்தைகள் வெளியே சென்ரு விளையாடுவதே இல்லை.

எல்லா குழந்தைகளையும் சொல்லி விட முடியாது. சில குழந்தைகள் வீட்டுக்கு வெளியே போய் கிரிக்கெட், ஃபுட்பால், கண்ணாமூச்சி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்.
ஆனால் பல குழந்தைகள் செல்போனில் வீடியோ கேம், ஷார்ட்ஸ், ரீல்ஸ் பார்ப்பது என பொழுதைக் கழிக்கிறார்கள். பெற்றோர் என்னதான் அழைத்தாலும், இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என போனை வைப்பதே இல்லை.
யூடியூப் ஷார்ட்ஸின் (Youtube shorts) மாயப்பிடியில் சிக்கி, "இன்னும் 5 minutes மா" எனச் சொல்லி மணிக்கணக்கில் திரையை வெறிக்கும் குழந்தைகளால், பெற்றோர்கள் சவால்களைச் சந்தித்தனர். டிஜிட்டல் உலகில், குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரம் செலவழிப்பதுடன், படிப்பு, விளையாட்டு, தூக்கம் என அனைத்தையும் புறக்கணித்தனர். இதனால் பெற்றோர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலைப் போக்க, யூடியூப் ஒரு புதிய, அத்தியாவசிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
யூடியூப் இப்போது பெற்றோர்களின் கைகளுக்கு 'ரிமோட் கண்ட்ரோலைக்' வழங்கியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட 'Parental Controls' (பெற்றோர் கட்டுப்பாடுகள்) மூலம், குழந்தைகள் யூடியூப் ஷார்ட்ஸ் பார்க்கும் நேரத்தை பெற்றோர்களே நிர்ணயிக்கலாம். குழந்தைகளின் திரை நேர மேலாண்மைக்கு இது முழு அதிகாரத்தையும் வழங்குகிறது.
இந்த அம்சங்களில் 'நேரக் கட்டுப்பாடு' (Time Limit) முதன்மையானது. ஒரு நாளில் குழந்தைகள் ஷார்ட்ஸ் பார்க்கும் நேரத்தை 15 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை பெற்றோர்கள் செட் செய்யலாம். நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிந்ததும், ஷார்ட்ஸ் தானாகவே நின்றுவிடும்.
விரைவில், ஷார்ட்ஸ் பார்க்கும் வசதியை முழுமையாக முடக்கும் (Block Option) அம்சமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தேர்வு மற்றும் படிக்கும் நேரங்களில் கவனச்சிதறலைத் தவிர்க்க உதவும். அத்துடன், "Take a Break" மற்றும் "Bedtime" போன்ற நினைவூட்டல்களைப் பெற்றோர்கள் செட் செய்யலாம். இது குழந்தைகளின் கண் மற்றும் மனநலத்தைப் பாதுகாக்கும்.
பதின்ம வயது (Teens) பிள்ளைகளுக்கும் பாதுகாப்பான உள்ளடக்கத்தை யூடியூப் உறுதிப்படுத்தியுள்ளது. நிபுணர்களுடன் இணைந்து புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கல்வி, அறிவியல் மற்றும் ஆக்கப்பூர்வமான வீடியோக்கள் மட்டுமே அவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும்; தேவையற்ற, வயதுக்கு மீறிய உள்ளடக்கங்கள் வடிகட்டப்படும்.
இந்தக் கட்டுப்பாடுகளை அமைப்பது மிக எளிது; பெற்றோர்களுக்குத் தனியே தொழில்நுட்ப அறிவு தேவையில்லை. யூடியூப் செயலியின் 'Family Center' பிரிவில் மாற்றங்களைச் செய்யலாம். தேவைக்கேற்ப, குறிப்பாக விடுமுறை நாட்களில், நேர வரம்புகளை மாற்றியமைக்கும் வசதியும் உள்ளது.
யூடியூப்பின் இந்த புதிய முயற்சி, டிஜிட்டல் உலகில் குழந்தைகளைப் பாதுகாக்கவும், ஆரோக்கியமான திரை நேரப் பழக்கங்களை உருவாக்கவும் பெற்றோருக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications