டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வருகிறது நீடில் இல்லாத சைடஸ் கொரோனா வேக்சின்.. அடுத்த வாரமே மக்களுக்கு செலுத்த திட்டம்? முழு விபரம்

Google Oneindia Tamil News

டெல்லி: சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் வேக்சின் அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் டிஎன்ஏ வகை கொரோனா வேக்சின் ஆகும் இது.

ZyCoV-D என்று அழைக்கப்படும் இந்த வேக்சின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை ஊசி இல்லாமல் needle-free injector மூலம் உடலுக்குள் செலுத்த முடியும்.

என்னங்க இது.. டெல்லியில் நடுரோட்டில் இப்படி எல்லாம் கூட நடக்குமா.. வைரலாகும் வீடியோ காட்சிகள்! என்னங்க இது.. டெல்லியில் நடுரோட்டில் இப்படி எல்லாம் கூட நடக்குமா.. வைரலாகும் வீடியோ காட்சிகள்!

அதாவது ஊசி போன்ற முனை இல்லாமலே இன்ஜெக்டர் மூலம் இதை உடலில் செலுத்த முடியும். இது மூன்று டோஸ் வேக்சின் ஆகும்.

டெஸ்ட்

டெஸ்ட்

இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 1ம் தேதி இந்த நிறுவனம் சைடஸ் கேடில்லா 3 டோஸ் வேக்சினுக்கான கடைசி கட்ட சோதனைகான முடிவுகளை வெளியிட்டது. இதில் இந்த வேக்சினின் எதிர்ப்பு திறன் 66.6 சதவிகிதம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சோதனை திருப்திகரமாக அமைந்து இருந்தது. மொத்தம் 28 ஆயிரம் பேரிடம் சோதனை செய்யப்பட்டு இதன் முடிவுகள் வெளியிடப்பட்டது.

சோதனை

சோதனை

இந்த சோதனை முடிவுகளை தொடர்ந்து ZyCoV-D கொரோனா வேக்சினுக்கு அவசர அனுமதி கொடுப்பது தொடர்பாக இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் வல்லுநர் குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து இந்த பரிந்துரையை ஏற்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ZyCoV-D வேக்சினுக்கு அனுமதி வழங்கியது.

 டிஎன்ஏ

டிஎன்ஏ

பொதுவாகவே டிஎன்ஏ வேக்சின் அதிக பாதுகாப்பு கொண்டது. கொரோனா வைரஸின் ஜீன்கள் பிரதி எடுக்கப்பட்டு அதன் டிஎன்ஏவை வைத்து இந்த வேக்சின்கள் உருவாக்கப்படுகின்றன. மாடர்னா வேக்சின் டிஎன்ஏ வேக்சின்தான். அதேபோல் மியூட்டேட் ஆகும் வேக்சின்களுக்கு எதிராக இந்த டிஎன்ஏ வேக்சினை உடனே மாற்றி, அப்டேட் செய்து கொண்டே இருக்க முடியும் என்பதால் இது வரும் நாட்களில் அதிக பலன் அளிக்க கூடியது.

மூன்று டோஸ்

மூன்று டோஸ்

இந்த வேக்சினை மிக மிக குளிர்ந்த வெப்பநிலையில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை 2-8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் 3 மாதங்கள் வரை வைக்க முடியும்.தற்போது வரை ZyCoV-D மூன்று டோஸ் வேக்சினுக்கு மட்டுமே இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் இரண்டு டோஸ் வேக்சினுக்கு பரிந்துரை மேற்கொள்ள வேண்டும் என்றால் கூடுதல் தகவல்களை அளிக்க வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கேடில்லா ஹெல்த்கேர் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

இதன் 10 மில்லியன் டோஸ்களை மத்திய அரசு ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது. ஒரு டோஸ் 265 ரூபாய் ஆகும். இதன் இன்ஜக்டர் தனியாக 93 ரூபாய் ஆகும். கேடில்லா நிறுவனம் தங்களின் சைடஸ் கேடில்லா வேக்சின் 12 முதல் 18 வயது கொண்டவர்களிடமும் அதிக ஆற்றல் கொண்டது என்று தெரிவித்துள்ளது.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    எப்போது

    எப்போது

    சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் இந்த வேக்சின் அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய அளவில் மொத்தமாக அறிமுகப்படுத்தும் முன் 7 மாநிலங்களில் முதல் கட்டமாக இந்த வேக்சின் அமலுக்கு வரும். தமிழ்நாடு, பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முதல் டோஸ் குறைவாக போடப்பட்டுள்ள மாவட்டங்களில் இந்த வேக்சின் அமலுக்கு வர உள்ளது.

    English summary
    Zydus Cadila needle-free Coronavirus vaccine may be rolled out by next week in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X