காரைக்குடி மாரியம்மனுக்கு பால்குடம் எடுக்கும் பக்தர்கள்..தண்ணீர் ஊற்றி வெப்பம் தணிக்கும் முஸ்லீம்கள்
காரைக்குடியில் முத்துமாரியம்மன் கோவில் பால்குட திருவிழா 16ஆம் தேதி காலையில் நடக்கிறது. அன்றைய தினம் விரதம் இருக்கும் பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்
காரைக்குடி: முத்துமாரியம்மனுக்கு பால்குடம் சுமக்கும் பக்தர்களின் பாதங்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாமல் தண்ணீர் ஊற்றி குளிர வைக்கின்றனர் முஸ்லீம் மக்கள். இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் வரும் மாசி-பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இந்த விழா கடந்த வாரம் கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இந்த காப்புக்கட்டும் நிகழ்ச்சியில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ள லட்சக்கணக்கான பக்தர்களும் காப்புக்கட்டி கடந்த வாரம் முதல் விரதம் இருந்து வருகின்றனர். முத்துமாரியம்மன் கோவில் பால்குட திருவிழாவையொட்டி நேற்று முதல் விரதம் இருக்கும் பக்தர்கள் காப்புக்கட்டி மஞ்சள் நிற ஆடையை அணிய தொடங்கியதால் காரைக்குடி நகர் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளித்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுமதி தலைமையில் கோவில் கணக்கர் பாண்டி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
விழாவையொட்டி தொடர்ந்து தினந்தோறும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தினசரியும் பக்தர்கள் பால் குடம் எடுத்தும் மாவிலக்கு வைத்து அக்னிசட்டி எடுத்தும் அலகு குத்தியும் அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
முத்தாலம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காரைக்குடி செஞ்சைப்பொட்டல் முத்தாலம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி புரம் முத்துமாரியம்மன் கோவில் வரைக்கும் ஏராளமான பக்தர்கள் 2 கிலோமீட்டர் தூரம் வரை பால்குடம் சுமந்து செல்கின்றனர். பால்குடம் சுமக்கும் பக்தர்களுக்கு ஏராளமானோர் மஞ்சள் ஊற்றி குளிர்வித்து வருகின்றனர்.
ஞாயிறுக்கிழமையான நேற்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அப்போது பஜார் பள்ளிவாசல் பகுதியில் முஸ்லீம் மக்கள் சாலைளில் தண்ணீர் ஊற்றி வெப்பம் தணித்தனர். கோடை வெயிலில் சுடச்சுட நடந்து பால்குடம் சுமந்து சென்றவர்களின் பாதங்களை முஸ்லீம் மக்கள் குளிர்வித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட திருவிழா நாளை மறுநாள் 16ஆம் தேதி காலையில் நடக்கிறது. அன்றைய தினம் விரதம் இருக்கும் பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் அன்றைய தினம் நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக காணப்படுவார்கள். தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் கரகம் பருப்பூரணிக்கு கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சியும், 17ஆம் தேதி இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications