"என்னடா பண்ணுவே.. செருப்பு பிஞ்சிடும்".. போலீஸ் அதிகாரியை எட்டி உதைத்த மாஜி எம்பி.. ஷாக் வீடியோ!

போலீஸ்காரரை எட்டி உதைக்கும் முன்னாள் எம்பியின் வீடியோ வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: "என்னடா பண்ணுவே.. செருப்பு பிஞ்சிடும்" என்று சொல்லி கொண்டே எகிறி கொண்டே வந்து, போலீஸ் அதிகாரியை தன் காலால் எட்டி உதைக்கிறார் முன்னாள் எம்பி அர்ஜுனன்! இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது.

Recommended Video

    Viral Video: கடைமையை செய்த Police-ஐ காலால் எட்டி உதைத்த Ex-MP Arjunan

    தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.. இதனால், சேலம் மாவட்டத்தில் 27 இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

     saathankulam: former aiadmk mp arjunan who kicked policemen, viral video

    இந்நிலையில், சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த முன்னாள் எம்பி அர்ஜுனன், தனது தோட்டத்தில் இருந்து ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அந்த சுங்கச்சாவடியில் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டு இருந்திருக்கிறார்கள்.. அதில், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட சில அதிகாரிகளும் அங்கு நின்று கொண்டுள்ளார்.. அந்த சமயத்தில், தர்மபுரி முன்னாள் எம்பி அர்ஜுனன் கார் வருகிறது.

    என்ன பிரச்சனை, எதனால் தகராறு ஆரம்பித்தது என்று தெரியவில்லை.. திடீரென அந்த சப்-இன்ஸ்பெக்டரை முன்னாள் எம்பி அர்ஜூனன் காரில் இருந்து இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.. பிறகு திடீரென்று கோபத்தில் கெட்ட வார்த்தையில் திட்டி கொண்டே திரும்பவும் காரில் ஏறி கொள்கிறார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் கோபமாகிறார், ஆனாலும் அதனை அடக்கி கொண்டு, "வேணாம்.. மரியாதையா பேசுங்க" என்கிறார்.

    இதை கேட்டதும் அர்ச்சுனனுக்கு இன்னும் ஆத்திரம் மண்டைக்கேறிவிட்டது.. காரில் இருந்து இறங்கி மறுபடியும் கெட்ட வார்த்தையில் பேசி, சப்-இன்ஸ்பெக்டரை எட்டி உதைக்கிறார்... அதற்குள் அங்கிருந்தோர் அர்ச்சுணனை தடுத்து நிறுத்தி, காரில் ஏற்றுகிறார்கள். மற்ற 2 போலீஸ் அதிகாரிகளும், அவரை சமரசம் செய்ய முயற்சிக்கின்றனர்.

    இந்த வீடியோதான் ராத்திரியில் இருந்து வைரலாகி வருகிறது.. சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் அடுக்கடுக்காக எழுந்து வரும் நிலையில், இப்படி ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. போலீசார் என்றும் பார்க்காமல், அணிந்திருந்த காக்கி டிரஸ்ஸுக்கும் மரியாதை தராமல், கெட்ட வார்த்தைகளால் திட்டி, ஒரு அரசியல்வாதியே இப்படி அவரை எட்டி உதைத்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+